போட்காஸ்ட்: முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகள்

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

குறைந்த மற்றும் நடுத்தர-வருவாய் நாடுகளில் உள்ள பராமரிப்பு அமைப்புகளின் மிக முக்கியமான சவால்களில் ஒன்று கர்ப்பிணி பெண்களுக்கான முன் பேறுகால பராமரிப்பை மேம்படுத்துவதாகும். டிசம்பர் 2015-ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, அத்தகைய பராமரிப்பு அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகளின் ஆதாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறது.