மக்கள்தொகை முதுமையடையும் போது, நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. யு கே யுனிவெர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட், Nuffield Department of Population Health -லிருந்து ஏஞ்சலா கோல்டர் மற்றும் அவர் உடன் பணியாளர்கள், தங்களுடைய சொந்த ஆரோக்கிய பராமரிப்பில் அதிகமாக கருத்து கூறுவதற்கு உள்ள அத்தகைய நோயாளிகளுக்கு உதவும் வழிகளை கண்டனர். மார்ச் 2015-ல் வெளியான அவர்களின் காக்ரேன் திறனாய்விலிருந்த முடிவுகளை பற்றி இந்த ஆதார வலையொலியில் நமக்கு கூறுகிறார்.