போட்காஸ்ட்: ஏடிஎச்டி-ற்கான மெத்தில்பெனிடேட்

அட்டென்ஷன் டெபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் அல்லது ஏடிஎச்டி என்பது குழந்தைப்பருவ உளநல பிரச்னைகளில் மிக பொதுவான ஒன்றாகும். இதற்கு சிகிச்சையளிக்க, மெத்தில்பெனிடேட் என்ற ஒரு மருந்து மிக பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகளைப் பற்றி காக்ரேன்
திறனாய்வாளர்கள் ஒரு மிக விரிவான ஆதார திறனாய்வை நவம்பர் 2015-ல் வெளியிட்டனர்; டென்மார்க், ரீஜன் சிலாந்து சைக்கியாட்ரிக் ரிசர்ச் யூனிட்டிலிருந்து, இந்த திறனாய்வின் முதன்மை ஆசிரியர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் ஓலே ஜேக்கப் ஸ்டோர்போ, இந்த திறனாய்வில் அவர்கள் கண்டது என்ன என்பது பற்றி நமக்கு இங்கு கூறுகிறார்