போட்காஸ்ட்: பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சிக்கான சிகிச்சை தலையீடுகள்

பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சி என்பது பக்கவாதத்திலிருந்து பிழைத்த மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானவர்களைக் பாதிக்கும் ஒரு பொதுவான மற்றும் கடுமையான பிரச்னையாகும். பிற அறிகுறிகள் மறைந்த பிறகும், அது பெரும்பாலும் சில காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கும். அயர்ச்சியானது, நோயாளியுடைய அன்றாட நடவடிக்கைகளில் பங்கு பெறுவதை தடை செய்யும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தின் மேல் எதிர்மறையான தாக்கங்களை கொண்டிருக்கும். எனினும், இதற்கான சிகிச்சையை பற்றி தெரிவிக்க நீண்ட காலமாக, எந்த ஒரு ஆதாரமும் இருந்ததில்லை. 2009-ல் வெளியான எங்களுடைய காக்ரேன் திறனாய்வின் முந்தைய பதிப்பு மூன்றே சோதனைகளை உள்ளடக்கி இருந்தது, அவற்றில் எதுவும்  பக்கவாதத்திற்கு-பின்னான அயர்ச்சிக்காக குறிப்பிட்டு வடிவமைக்கப்படவில்லை. எனினும், கடந்த பத்து வருடக்  காலத்தில், அதிகமான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த தலைப்பில் ஆர்வம் கொண்டவர்களாக ஆகி உள்ளனர்  மற்றும் பல்வேறு புதிய சிகிச்சை தலையீடுகள் சோதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிகிறோம். ஆதலால், சில புதிய ஆதாரத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த புதுப்பித்தலை நாங்கள் நடத்தினோம்,  மற்றும் இதை எங்களால் செய்ய முடிந்தாலும், அநேக ஐயப்பாடுகள் இன்னும் எஞ்சியபடி உள்ளன.