இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன். அநேக நாடுகளில், சமீபத்திய வருடங்களில் மிகவும் கவனிக்கத்தகுந்த பொது நலவாழ்வு நடவடிக்கைகளில் ஒன்று, உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததாகும் . இந்த தடைகளின் ஆரோக்கிய விளைவுகளை ஒரு காக்ரேன் திறனாய்வு ஆராய்கிறது மற்றும் அது பெப்ரவரி 2016-ல் புதுப்பிக்கப்பட்டது. இத்தகைய தேசியளவு தடைகளில் ஒன்றை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளின் யுனிவெர்சிட்டி காலேஜ்லிருந்து கேட் பிரேசர், இதன் மீதான ஆதார அடிப்படை விரிவாக்கத்தை மற்றும் சமீபத்திய கண்டுப்பிடிப்புகளை பற்றி கூறுகிறார்.