சோத்துக் கற்றாழை என்பது வெப்ப பருவ நிலைகளில் வளரும் சதைப்பற்றுள்ள கள்ளிச் செடி போன்றதாகும். க்ரீம்கள் மற்றும் குளியலறை பொருள்கள் போன்ற விதவிதமான அழகு சாதன பொருள்களில் சோத்துக் கற்றாழை மிக பரவலாக பயன்படுத்தப்படும். விலங்குகளில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள், புண் ஆறுவதற்கு சோத்துக் கற்றாழை உதவக் கூடும் என்று பரிந்துரைக்கின்றன. சோத்துக் கற்றாழையை, க்ரீமாகவோ அல்லது களிம்பாகவோ தோலின் மேல் பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லது ஒரு காயக் கட்டின் உள்ளே செறிவூட்டப்பட்டு ஒரு புண்ணின் மேல் பயன்படுத்தலாம்.கடுமையான (எடுத்துக்காட்டிற்கு: வெட்டுக் காயங்கள், அறுவை சிகிச்சை வெட்டுக் கீறுகள், மற்றும் தீக்காயங்கள்) மற்றும் நாள்பட்ட (எடுத்துக்காட்டிற்கு:புண் தொற்றுகள், இரத்த குழாய் மற்றும் சிரை புண்கள்) புண்களைக் கொண்ட மக்களில், புண் ஆறுவதை சோத்துக் கற்றாழை ஊக்கப்படுத்துமா என்பதின் மேலான ஆதாரத்தை அறிய இந்த திறனாய்வு ஆசிரியர்கள் விரும்பினர். இந்த கேள்விக்கு பதிலளிக்க, போதுமான ஆராய்ச்சி ஆதாரம் இல்லை என்று இந்த திறனாய்வு கண்டது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.