நீரிழிவு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ( டையாபடிஸ் கிட்னி டிசிஸ், டிகேடி) கொண்ட மக்களில், பல்கூட்டான கோட்பாடுகளை கடைபிடித்தல் மிகவும் குறைவாக இருக்கும். தீவிர விளக்கக் கல்வி மற்றும் நடத்தை ஆலோசனை ஆகியவை கடைப்பிடிதலை ஊக்கப்படுத்தும் சிகிச்சை தலையீடுகளில் தேவைப்படுகின்றன. டிகேடி கொண்ட நோயாளிகளில், விளக்கக் கல்வி திட்டங்களை பிற நுட்பங்களோடு ஒப்பிட்ட சீரற்ற சோதனைகளை இந்த திறனாய்வு கண்டது. டிகேடி கொண்ட நோயாளிகளை சம்மந்தப்படுத்திய இரண்டே இரண்டு ஆய்வுகளை கண்டறிந்தது. விளக்கக் கல்வி திட்டங்கள், நோயாளியின் நீரழிவு நோய் பற்றிய அறிவு, சுய-திறன், நம்பிக்கை மாற்றங்கள் மற்றும் சுய-மேலாண்மை நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றின் மேல் சில நன்மையான விளைவுகளைக் கொண்டிருந்தாலும், கண்டறியப்பட்ட இரண்டு ஆய்வுகளிலிருந்த சிறிய அளவில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (207) மற்றும் அவற்றின் குறைந்த செயல்முறையியல் தரம் ஆகியவை கவனமான மதிப்பீட்டிற்கு வகை செய்தது. பெரியளவு, உயர்-தர சோதனைகள் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.