Skip to main content

செரிப்ரல் பால்சி கொண்ட குழந்தைகளில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்கு பேச்சு மற்றும் மொழி பயிற்சி உதவக் கூடும், ஆனால் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

செரிப்ரல் பால்சி என்பது, பிறப்பிற்கு முன், பிறப்பின் போது அல்லது அதற்கு பின் மூளையில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகும் ஒரு அசைவு சார்ந்த பிரச்னையாகும். செரிப்ரல் பால்சி கொண்ட குழந்தைகளில் பேசுவதற்கான திறன், பெரும்பாலும் பேச்சு மற்றும் பேச்சின் போது பயன்படுத்தப்படும் சைகைகளில் ஏற்படும் கோளாறுகளினால் பாதிக்கப்படும். செரிப்ரல் பால்சி கொண்ட குழந்தைகளில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்கு பேச்சு மற்றும் மொழி பயிற்சி உதவக் கூடும். இவை, இயற்கை முறைகளிலான தொடர்பை மேம்படுத்துதல், குறியீடுகள் அட்டவணை அல்லது செயற்கை பேச்சு கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு துணைவர்களை பயிற்றுவித்தல் போன்ற வழிகளை உள்ளடக்கும். செரிப்ரல் பால்சி கொண்ட குழந்தைகளில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்கு பேச்சு மற்றும் மொழி பயிற்சி உதவக் கூடும் என்பதற்கு உறுதியற்ற ஆதாரத்தை இந்த திறனாய்வு கண்டது, ஆனால் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Citation
Pennington L, Goldbart J, Marshall J. Speech and language therapy to improve the communication skills of children with cerebral palsy. Cochrane Database of Systematic Reviews 2004, Issue 2. Art. No.: CD003466. DOI: 10.1002/14651858.CD003466.pub2.