வயது காரணமாக, தூக்க பிரச்னைகள் மிக பொதுவாக ஏற்படுவதாகும், மற்றும் அது தனிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக் கூடும் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு செலவுகளைக் அதிகரிக்கக் கூடும். வயதான மக்கள் அவர்களின் தூக்க பிரச்னைகளுக்காக பரந்த அளவிலான மருந்துகள் பரிந்துரைக்கப்படுவர், அவற்றில் பெரும்பாலனவை பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். ஒரு வயதான நபரின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மிதமான தசை எதிர்பாற்றல் பயிற்சி மற்றும் வேக நடையை உள்ளடக்கிய உடற்பயிற்சி திட்டத்தின் திறனை இந்த திறனாய்வு கருத்தில் கொண்டது. ஒரு சிறிய சோதனையிலுள்ள ஆதாரம் ஊக்கமளிக்கிறது என்று இந்த திறனாய்வு ஆசிரியர்கள் அறிக்கையிடுகின்றனர், மற்றும் மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.