Skip to main content

குழந்தைகளுக்கான பாதசாரி பாதுகாப்பு விளக்கக் கல்வி, அவர்களின் அறிவை மேம்படுத்தும் மற்றும் அவர்கள் சாலையைக் கடக்கும் நடத்தையை மாற்றும், ஆனால் காயத்தின் மேலான விளைவுகள் பற்றி தெரியவில்லை.

சாலை போக்குவரத்து மோதல்களால் ஒரு பெரும் விகித மக்கள் கொல்லப்படுவது அல்லது கடுமையாக காயமடைவது பாதசாரிகள் ஆவர், மற்றும் குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவர். மக்கள் எவ்வாறு சாலை சூழலை சமாளிக்கலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க விளக்கக் கல்வி திட்டங்கள் முயற்சி செய்கின்றன. சில நேரங்களில், பெற்றோர்கள் கல்வியாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். சோதனைகளின் இந்த திறனாய்வு (பெரும்பாலும் குழந்தைகளில்), பாதசாரி பாதுகாப்பு விளக்கக் கல்வி, குழந்தைகளின் சாலை கடக்கும் அறிவையும் மற்றும் நோக்கப்பட்ட அவர்களின் சாலை கடக்கும் நடத்தையையும் மேம்படுத்தியது என்று கண்டது. விளைவுகள் காலப்போக்கில் குறையத் தொடங்குமாதலால், முறையான இடைவெளிகளில் விளக்கக் கல்வி திரும்பவும் நடத்தப்பட வேண்டும். எனினும், அறிவு மற்றும் நடத்தையில் இந்த மாற்றங்கள், குறைந்த பாதசாரிகளின் இறப்புகள் மற்றும் காயங்களோடு இணைக்கப்படலாமா என்பது தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Duperrex O, Roberts I, Bunn F. Safety education of pedestrians for injury prevention. Cochrane Database of Systematic Reviews 2002, Issue 2. Art. No.: CD001531. DOI: 10.1002/14651858.CD001531.