தனிப்பட்ட கலந்தாய்வு, புகைப்பிடிப்பதை விடுவதற்கு முயலும் மக்களில் பொதுவாக பயன்படுத்தப்படுவதாகும். மருத்துவ பராமரிப்பிற்கு தனிப்பட்டு, ஒன்று அல்லது அதற்கு மேலான முக-முகமான அமர்வுகள் மூலம் ஒரு பயிற்சியளிக்கப்பட்ட தெரபிஸ்ட்டால் வழங்கப்பட்ட கலந்தாய்வின் சோதனைகளை இந்த திறனாய்வு கண்டது. அனைத்து சோதனைகளும், 10 நிமிடங்களுக்கு மேலான அமர்வுகளை கொண்டிருந்தன, மற்றும் பெரும்பாலானவை மேற்படியான தொலைபேசி தொடர்பு ஆதரவை உள்ளடக்கியிருந்தன. புகை பிடிப்பவர்களில், தனிப்பட்ட கலந்தாய்வு புகைப்பிடிப்பதை விட உதவும் என்று இந்த திறனாய்வு கண்டது, ஆனால், இன்னும் அதிக தீவிரமான கலந்தாய்வு சிறந்ததாக இருக்குமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.