பொது ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் கணக்கெடுப்பு கேள்வித்தாள்களை அலைபேசி பயன்பாடுகள் (ஆப்ஸ்) மூலம் வழங்க பயன்படுத்த முடியுமா?

பின்புலம்

கணக்கெடுப்பு கேள்வித்தாளகள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி சம்பந்தமான கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு முக்கியமான கருவிகளாக உள்ளன, காரணம் அவை அநேக எண்கள் கொண்ட குழுவிடமோ, அல்லது உணர்ச்சிமிக்க தலைப்பை கொண்ட பதிவுகளை பெறவும், மற்ற தகவல் தொகுப்பு நுட்பங்கள் காட்டிலும் முக்கியமான கருவியாக இருக்கிறது. செயலிகள் பயன்பாடுகள் (ஆப்ஸ்) அல்லது tablet மூலமாக பெறப்படும் கணக்கெடுப்பு பதிவுகள் கேள்விகளை அதிகரிக்கவும், மற்றும் விரைவாக தகவல்களை பெறவும் அதே நேரத்தில் செலவை குறைக்கவும் உதவுகிறது். எனினும், இந்த தொழில் நுட்பம் பரவலாக பயன்படுத்தும் முன்பு, தரமான கேழ்விக்கான பதிவுகளை இவை எப்படி பாதிக்கும் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியமாய் இருக்கின்றது. குறிப்பாக, பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான தீர்மானங்களை நாம் பெற்ற பதிவுகளின் தரங்களை சார்ந்தேயிருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

நோக்கம்

இந்த கொக்ரைண் ஆயவில், செயலிகள் மூலமாக பெறப்பட்ட தகவல்களை கொண்டு பல்வேறு அம்சங்கள் கொண்ட தரமான பதில்களையும் மற்றும் அதன் பாதிப்பையும் மதிப்பீடு செயதள்ளோம். இதில் மறுமொழிகள் விகிதங்கள், தகவல் துல்லியம், தகவல் முமுமை, கேள்விற்கு பதில் தெரிவிக்க எடுத்துக்கொண்ட நேரம் மற்றும் மறுமொழி கூறுபவரின் ஏற்புடைமை ஆகியவை உள்ளடக்கியது.

முறைகள் மற்றும் முடிவுகள்

நாங்கள் ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2007 ஆண்டிற்கு உட்பட்ட ஆய்வு தகவல்களை தேடினோம். 14 ஆய்வுகளை சேர்த்து, அவைகளில் உள்ள 2272 பேர்களின் தகவல்களை பகுப்பாய்ந்து சேர்க்கப்பட்டுள்ளது. ஆய்வுகளில் பல வேறுபாடுகள் குறுக்கே இருந்தப்படியால meta-analysis் ஆய்வுகளை நாங்கள் நடத்தவில்லை. மாறாக, நாம் ஒவ்வொரு ஆய்வு முடிவுகளை விவரித்துள்ளோம். இந்த ஆய்வு இரு வேறு அமைப்புகளில் செய்யப்பட்டது. ஒன்று சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை மற்றொன்று ஒப்பீடு மாதிரி இல்லாமல். சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை அல்லது மருத்துவ நலன் அடங்கிய சூழ்நிலை மருத்துவ பயிற்சியாளர்கள் அல்லது ஆய்வாளர்கள் சிறந்த முறையில் சாத்தியமான மறைவுக்கூர்கள் அதாவது ஆய்வின் இடம், முடிவுகள் பெறப்பட்ட நேரம, உபயோகப்படுத்திய தொழில் நுட்பம் மற்றும் பதில் தருவோர்க்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளில் உதவ இருக்கும் ஏற்பாடுகள். கட்டுபாடில்லாத அமைப்புகளிலோ மருத்துவ சூழ்நிலைகளுக்கு வெளியே பெறப்பட்ட ஆய்வுகள் (உதாரணமாக தகவல் தருபவரின் வீடு). காகிதம், மடிகணினி மற்றும் குறுந்தகவல் ஆகியவைகளுக்கு இணையாகவே செயலிகளும் தகவலை பெறுகின்றன என்பது எங்கள் முடிவாக இருக்கின்றது. மற்ற தகவல் பெறும் கருவிகளை காட்டிலும் செயலிகள் விரைவாக செயல்படுத்தக் கூடியதாக உள்ளது என்பதில் தெளிவில்லைு. பதிலாக, நம்முடைய ஆய்வின் முடிவு காரணிகளாகிய மருத்துவ ஜனத்தோகையின் பண்புகள், மற்றும் ஆய்வு, மற்றும் இடைமுக திட்டம் விளைவுகள் ஆகியவைகள் ஆய்வின் முடிவை மிதமாக மாற்றக்கூடும். பெறப்பட்ட தகவளின் முமுமை, மற்றும் நெறிமுறைகளை பின்பற்றுவது ஆகியவைகள் கட்டுபாடில்லாத அமைப்புகளில் மாத்திரம் குறிபிடபட்டிருன்தது. காகிதத்தோட ஓப்பிட்டு பார்க்கும்போது முமுமையான தகவலையும், நெறிமுறைகளை மாற்றிக்கொள்ள குறுந்தகவலை காட்டிலும் செயலிகள் சிறப்பாக காண்கிறோம். பலதரப்பட்ட அணுகுமுறைகள் தகவல் தருபவரால் கொடுக்கப்பட்டது அனாலும் எல்லாவற்றையும் ஏற்புடையதாகவும், தரப்படுத்தப்பட்ட தகவலாக ஆய்வுக்கு உட்படுத்த முடியவில்லை. கடைசியாக, உட்படுத்தபட்ட ஆய்வில் தகவல் தரம் மற்றும் தகவல் துல்லியம் குறித்த குறிப்பிடு இல்லை.

முடிவுரை

ஓட்டுமொத்தமாக, செயலிகள் மூலம் நடத்தப்படும் கணக்கெடுப்புகள் எந்தவிதமான பாதிப்பை தருகின்றன என்பதை உறுதிபடுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. கேழ்விகளை எந்த முனையில் பெறுகிறோம் மற்றும் அதன் நிர்வாக முறைகளை ஒரே அளவில் அல்லது தரத்தில் இருந்தால் செயலிகள் உபயோகப்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் தகவளின் சமபலத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. எதிர்காலத்தில் தகவலை பெறும் முறையின் வடிவமைப்பு, கணக்கெடுப்பின் கேழ்விகள், தகவலின் சமநிலையை பாதிக்கும் கூர்கள், மற்றும் இந்த ஆய்வில் ஆராய்ந்த முடிவுகள் நினைவில் கொள்ளவேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Tools
Information