கடுமையான (acute) குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள்

திறனாய்வு கேள்வி

கடுமையான குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகளின் திறனை மதிப்பீடு செய்வது.

பின்புலம்

பெரும்பாலும் வலி மற்றும் இயலாமையுடன் ஒன்று சேர்ந்து வரும் ஒரு பொதுவான கோளாறு முதுகுவலி ஆகும். உடற்பயிற்சி சிகிச்சை, மற்றும் மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள் (MCE) போன்றவை முதுகுவலி நோயாளிகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனினும், கடுமையான முதுவலியுள்ள நோயாளிகளுக்கு இதன் செயல்திறன் தெளிவற்றதாக உள்ளது.

தேடல் தேதி

இந்த ஆதாரம் ஏப்ரல் 2015 நிலவரப்படியானது.

ஆய்வு பண்புகள்

கடுமையான அல்லது சற்றே கடுமையான முதுகுவலி உள்ள (N = 197 பங்கேற்பாளர்கள்) நோயாளிகளுக்கு மதிப்பீடு செய்த மூன்று ஆராய்ச்சிகளை நாங்கள் இந்த திறனாய்வுக்கு சேர்த்தோம். பங்கேற்பாளர்கள் பொதுவாக நடுத்தர வயதானவர்கள் மேலும் அவர்கள் ஆரம்ப மற்றும் கடைநிலை மருத்துவ நிலையங்களில் இருந்து சேர்க்கப்பட்டனர். தொடர் கண்காணிப்பு காலம் 4 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் வரை இருந்தது.

முக்கிய முடிவுகள்

முதுகு மூட்டு இழுத்துப்பொருத்தல் (Spinal Manipulative therapy), இதர உடற்பயிற்சிகள், வலி மற்றும் உடல் உயலாமை குறைக்கும் மருந்துகளுடன் ஒப்பிடும்போது மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள் எந்த பயனையும் அளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முதுகுவலி வராமல் மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள் தடுக்குமா என்பது தெரியவில்லை.

சான்றின் தரம்

இந்த ஆய்வின் முடிவுகள் மிக குறைவு மற்றும் குறைந்த தர ஆதரங்கள் கொண்டதாக இருந்தது. ஒப்பீடுகளில் சிறிய ஆய்வு அளவு பங்கேற்பார்கள் இருந்தமையால் அனைத்து அவை துல்லியமற்று இருந்ததால் நாங்கள் தர இறக்கம் செய்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: நவீன் குமார் மற்றும் சி.இ. பி. என்.அர்.

Tools
Information