நாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை.

பின்புலம்

இரத்த சோகையானது, பொதுவாக உலக மக்கள் தொகையில் கால் பகுதியை பாதிப்பதாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் சுற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் (இவை இரண்டும் பிராணவாயுவை எடுத்து செல்பவை) அளவின் குறைப்பாடு என்று வரையறுக்கப்படும். மதிப்பிடப்பட்ட 50% இரத்த சோகை கொண்ட மக்கள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை அடைகிறார்கள். வயது வந்த ஆண்கள் மற்றும் கர்ப்பிணி இல்லாத, சமீபத்தில் குழந்தையை பெற்றெடுக்காத, சிறுநீரக நோய் இல்லாத வயது வந்த பெண்களில், இரும்பு சத்து சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் பயனை மதிப்பீடு செய்ய நாங்கள் விரும்பினோம். இந்த நோக்கத்தை அடைவதற்காக, தொடர்புடைய ஆய்வுகளை ஜூலை 2013-ல் மருத்துவ இலக்கியத்தில் நாங்கள் தேடினோம். ஆராயப்படும் விதவிதமான சிகிச்சை தலையீடுகள், ஒரே மாதிரியான மக்களுக்கு அளிக்கப்படும் வகையில் பங்கேற்பாளர்கள் பெறும் சிகிச்சை, வாய்ப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் ஒரு வகையான ஆய்வு- நாங்கள் சீரற்ற சோதனைகளை மட்டுமே உள்ளடக்கினோம். இது, பல்வேறு சிகிச்சைகளை பெறும் மக்கள் மத்தியில், அவர்களிடம் முன்னரே இருக்கும் வேறுபாடுகளை ஆராய்வதற்கு பதிலாக, இம்மக்களில், சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு அனுமதிக்கும். வெளியிடப்பட்ட ஆண்டு அல்லது மொழியை பொருட்படுத்தாமல், அனைத்து சோதனைகளையும் நாங்கள் சேர்த்தோம். இரண்டு திறனாய்வு ஆசிரியர்கள், சுயாதீனமாக ஆய்வுகளை தேர்வு செய்தனர், மற்றும் பிழைகளை குறைப்பதற்கு, இந்த ஆய்வுகளில் இருந்து தகவலை பதிவு செய்தனர்.

ஆய்வு பண்புகள்

இரும்பு சத்து ஊசிகள், இரும்பு சத்து மாத்திரைகள் அல்லது எந்த சிகிச்சையும் பெறாத 4745 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த 21 சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். இரத்த இழப்பு, புற்று நோய், பல்வேறு காரணங்களினால் அறுவை சிகிச்சை முன்னான இரத்த சோகை ஆகியவற்றை, மற்றும் பிறவற்றில், இதய செயலிழப்பை இந்த சோதனைகளின் மருத்துவ அமைப்புகளாக சேர்க்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சோதனைகள், லேசான முதல் மிதமான இரத்த சோகை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை சேர்த்திருந்தன, மற்றும் இரும்பு சத்து சிகிச்சைக்கு ஒவ்வாமை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை விலக்கி இருந்தன.

முக்கிய முடிவுகள்

இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சையின்மைக்கு இடையேயான ஒப்பீடுகள், இறப்பு குறைவு அல்லது வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தின. எனினும், சிகிச்சையின்மைக்கு எதிராக, இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பாளர்களின் விகிதம் இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்கள் மத்தியில் குறைந்தது என்று காணப்பட்டது. சிகிச்சையின்மைக்கு எதிராக, இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்களின் ஹீமோகுளோபின் நிலைகள் அதிகமாக இருந்தன. இரும்பு சத்து ஊசிகளை பொறுத்தவரை, இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது சிகிச்சையின்மைக்கு பிறகு பதிவாகும் ஹீமோகுளோபின் அளவு நிலைகளை ஒப்பிடுகையில் இரும்பு ஊசிகளுக்கு பின்னர் உயர்ந்திருந்தன, எனினும், இறப்பு குறைவு , இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, அல்லது பங்கேற்பாளர்கள் வாழ்க்கைத் தரம் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதை ஆதாரங்கள் காட்டவில்லை. ஏற்றப்பட்ட இரத்தத்தின் சராசரி அளவு இரும்பு சத்து மாத்திரை குழுவை விட இரும்பு சத்து ஊசி குழுவில் குறைந்து இருந்திருந்த போதிலும், ஒரே ஒரு சோதனை, குறிப்பிடத்தக்க சந்தேகத்தை அறிவிக்கிற வகையில் இந்த விளைவை பற்றி அறிக்கையிட்டிருந்தது. சிகிச்சையின்மைக்கு எதிராக இரும்பு சத்து சிகிச்சை பெற்ற மக்கள் இடையே தீவிர சிக்கல்களுக்கான வித்தியாசங்கள் துல்லியமாக இல்லை. இரும்பு சத்து ஊசிகள் காரணமாக கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் பதிவாயின என்று எந்த சோதனைகளும் அறிவிக்கவில்லை, இவை அரிதானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான இரும்பு சத்து மாத்திரை சிகிச்சை தொடர்பான பாதகமான நிகழ்வுகள் மிக லேசானவைகளாக இருந்தன; குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற விளைவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு இரும்பு தயாரித்தலின் மருத்துவ பயன்பாட்டை மற்றொன்றுடன் ஒப்பிடுகையில் அவை துல்லியமாக இருக்கவில்லை. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தெளிவாக வழங்கப்பபடாத காரணத்தினால், குறிப்பிட்ட மருத்துவ சூழ்நிலைகளில் இரும்பு சத்து சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. சுருக்கமாக, இரத்த சோகை கொண்ட வயது வந்த ஆண்களுக்கு அல்லது கர்ப்பமில்லாத, சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த, இரத்த சோகை கொண்ட வயது வந்த பெண்களுக்கு, வழக்கமான இரும்பு சத்து ஊசி பயன்பாட்டிற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் தற்போது இல்லை. பக்க விளைவுகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய இரத்த சோகை உள்ள வயது வந்த ஆண்கள் மற்றும் வயது வந்த பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும். ஒரு இரும்பு தயாரிப்பு மற்றொன்றை விட நன்மையுள்ளது என்று பரிந்துரைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எதிர்கால ஆராய்ச்சி

இரும்பு சத்து சிகிச்சையானது, இறப்பு மற்றும் இரத்தம் ஏற்றுதல் தேவைகளை குறைக்குமா மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துமா என்பதை தீர்மானிக்க கூடுதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய சோதனைகள், தவறான முடிவுகளுக்கான வாய்ப்பைக் குறைக்க உரிய முறையில் வடிவமைக்கப்பட்டு மற்றும் பெரிய அளவில் போதுமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information