சிசொப்ரேனியாவின் வழக்கமான பராமரிப்பிற்கு எதிராக யோகா

திறனாய்வு கேள்வி

சிசொப்ரேனியா கொண்ட மக்களுக்கு, யோகா ஒரு கூட்டு சிகிச்சையாக பலனளிக்குமா?

பின்புலம்

பழங்கால இந்தியாவிலிருந்து யோகா வந்துள்ளது மற்றும், மனது மற்றும் உடலுக்கிடையே சமநிலையை முன்னேற்றுவதற்கு உடல் இருக்கை நிலைகள் மற்றும் சுவாச பயிற்சிகளை உள்ளடக்கியது. தளர்வு மற்றும் உடற்பயிற்சிக்கு, வலிமையை, இழுவைத் தன்மை, ஒருங்கிணைவு, நீடித்து உழைக்கும் திறம், மற்றும் சுவாச கட்டுப்பாடு, மற்றும் கவனக் கூர்மை ஆகியவற்றை அதிகரிக்கும் ஒரு முறையாக யோகா மிக பரவலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், யோகா மனஅயர்ச்சியை குறைத்து மற்றும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் எண்ணங்களை அதிகரிக்கிறது என்று காட்டுகிறது. அனேக ஆரோக்கிய நிலைகளுக்கு, இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துதலை மேம்படுத்துதல் உட்பட, அதே போன்று, மனச்சோர்வு மற்றும் பதட்ட கோளாறுகள் ஆகிய மன ஆரோக்கிய நிலைகளுக்கு யோகா ஒரு இணைப்பு சிகிச்சையாக பயன்படுகிறது,

யோகா ஒரு கூட்டு சேர்க்கை சிகிச்சையாக , சிசொப்ரேனியாவின் மிக கடின அறிகுறிகளை (சத்தங்கள் கேட்குதல், காணுதல், மக்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஆர்வமின்மை, சோர்வு, உணர்ச்சிகள் அற்ற நிலை மற்றும் ஒதுங்குதல்) குறைத்து மற்றும் சிசொப்ரேனியா கொண்ட மக்களில் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது என்று சில ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. குறிப்பாக, சிசொப்ரேனியா கொண்ட மக்களுக்கு யோகா மற்றும் அதின் பயன் பற்றி குறைவான ஆராய்ச்சியே உள்ளது.

ஆய்வு பண்புகள்

சிசொப்ரேனியா கொண்ட மக்களை, வழக்கமான பராமரிப்பிற்கு மற்றும் யோகா அமர்வுகளுக்கு சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்த எட்டு குறைந்த-காலக் கட்ட ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். விளக்கப்பட்டிருந்த யோகா திட்டங்கள் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை கால அளவில் மாறுப்பட்டிருந்தன, மற்றும் எட்டு முதல் அதிகபட்சம் 36 அமர்வுகளைக் கொண்டிருந்தன. ஜனவரி 2015-ல், காக்குரேன் சிசொப்ரேனியா குழுவின் பதிவேட்டை மின்தேடல் மூலம் இந்த ஆய்வுகளை நாங்கள் கண்டோம். அனைத்து ஆய்வுகளும் பரிந்துரைக்கப்பட்ட எதிர்-உளப்பிணி சிகிச்சையை பங்கேற்பாளர்களுக்கு தொடர்ந்தன

முக்கிய முடிவுகள்

சிசொப்ரேனியா கொண்ட மக்களுக்கு, யோகா பயனளிக்கும் என்று சில முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. யோகா, உளநிலை, சமூக செயல்பாடு, மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு நன்மையளிக்கும்,ஆனால் கிடைக்கப் பெறும் ஆதாரம் பலவீனமாக உள்ளது மற்றும் மிகவும் கவனத்துடன் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. தீய விளைவுகளை பற்றி அறிக்கையிட்ட ஒரு சோதனை, அதை பற்றி எதுவும் காணவில்லை. அனேக மிக முக்கியமான விளைவுகள், அறிவாற்றல், நிதி கவனப்பாடுகள், மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஆகியவை இந்த ஆய்வுகளில் குறிப்பிடப் படவில்லை. சிசொப்ரேனியாவிற்கு, வழக்கமான பராமரிப்பிற்கு கூட்டாக யோகா பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதற்கு நல்ல-தரம் வாய்ந்த ஆதாரம் இந்த திறனாய்வில் கிடைக்கவில்லை.

சான்றின் தரம்

ஆதாரம் குறைவாகவும் மற்றும் பலவீனமாகவும் இருந்தது. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளின் எண்ணிக்கை சிறிதாக இருந்தன மற்றும் குறைந்த-காலக் கட்ட பின்-தொடர்தல் மட்டுமே அறிக்கையிடப்பட்டிருந்தன. ஆதலால், முக்கியமான விளைவுகளை நோக்கும் அதிகமான, பெரிய, மற்றும் நீண்ட-கால சோதனைகள் தேவைப்படுகிறது.

பென் கிரே, முதுநிலை ஆராய்ச்சியாளர்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information