தாழ் பிறப்பு எடைக்குறைந்த குழந்தைகளுக்கு உண்டாகும் திறந்த தமனி நாளம் சிகிச்சைக்கு(PDA) பாரசிடமோல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்:

குறைகாலபிறப்பு அல்லது மிக சிறிய குழந்தைகளுக்கு உண்டாகும் ஒரு பொதுவான சிக்கல் பிடிஏ (PDA). பிடிஏ (PDA) என்பது நுரையீரல் மற்றும் இதயதிற்கு இடையே ஒரு திறந்த இரத்தக்குழல். அது பிறந்த பிறகு மூடிவிடும், ஆனால் சில நேரங்களில், குழந்தையின் வளர்ச்சி முதிராத நிலையில் அது திறந்தே இருந்துவிடும். பிடிஏ வாழ்க்கையை அச்சுறுத்தும் சிக்கல்கள் ஏற்படுத்தலாம். பிடிஏ(PDA) வின் வழக்கமான சிகிச்சை இண்டோமெதேசின் அல்லது ஐபுப்ரூஃபன். சமீபத்தில் பாராசிட்டமால்(அசிடமினோஃபென்) குழ்தைகளுக்கு காய்ச்சல் அல்லது வலி சிகிச்சை போது பயன்படுத்தப்படும் மருந்து ஐபுப்ரூஃபன்னுக்கு மாற்றாக சாத்தியமுள்ள குறைந்த பக்க விழைவுகள் உடைய மருந்து என தெரிவிக்கபடுகிறது. பிடிஏ(PDA) யை மூடுவதற்கு பாராசிட்டமால் ஒரு கவர்ச்சிகரமான மாற்றாக இருக்கும் என்று அதிகmana எண்ணிகையில் நோய் விளக்கக் ஆய்வுகள் (case studies) மற்றும் தொடர் நோய். விளக்கக்ஆய்வுகள் (case series) கருத்து தெரிவித்துள்ளன.

ஆய்வுகளின் பண்புகள்:

நாங்கள் தாழ் பிறப்பு குழந்தைகளின்ஆரம்பக்காலத்தில் பிடிஏ(PDA) வின் சிகிச்சையில் ஐபுப்ரூஃபன் எதிராக பாரசிட்டமால் திறன் மற்றும் பாதுகாப்பை ஒப்பிட்ட 250 பங்கேற்ப்பாளர்கள் கொண்ட இரண்டு ஆய்வுகளை கண்டறிந்தோம். ஆய்வுகள் துருக்கி மற்றும் சீனாவில் நடத்தப்பட்டன.

முக்கிய கண்டுபிடிப்புகள்:

இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை இணைத்த போது, பிடிஏ(PDA) மூட பாரசிட்டமால் வெற்றி விகிதம் ஐபுப்ரூஃபனை ஒத்திருந்தது. தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் இரண்டு குழுவிலும் ஓன்று போல் இருந்தது. எனினும், பொதுவாக முடிவுகளின் போக்குகள் பாரசிட்டமால் பெற்ற குழந்தைகளுக்கு சாதமாகவே விளங்கின மற்றும் கூடுதலாக பாரசிட்டமால் குழுவில் பாதகமான நிகழ்வுகள் குறைவாக இருந்தன. ஐபுப்ரூஃபன் சிகிச்சை விட பாரசிட்டமால் சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படும் காலம் குறைந்தது மற்றும் அதி பைலிரூபினிரத்தம் (hyperbilirubinaemia) ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தது.

சான்றுகளின் தரம்:

குழந்தைகள் எந்த மருந்து (பாரசிட்டமால் அல்லது ஐபுப்ரூஃபன்) பெற்றனர் என்று சுகாதார நிபுணர்களிடம் மறைக்கப்படவில்லை என்றாலும் ஆய்வுகளின் தரம் நன்றாக இருந்தது,

முடிவுகள்

பிடிஏ(PDA)யை மூடுவதற்கு இண்டோமேதசின் மற்றும் ஐபுப்ரூஃபன்க்கு மாற்றாக ஒரு புதிய நம்பிக்கைக்குரிய, குறைந்த பக்க விழைவுகள் உடைய மருந்தாக தோன்றுகிறது.

பிடிஏ(PDA) உடைய குறைகால குழந்தைகளுக்கு பாரசிட்டமால் ஒரு தரமான சிகிச்சை என்று பருந்துரைபதற்கு முன்னர் இந்த தலையீட்டின் சோதனை மற்றும் நீண்டகால தொடர் கண்காணிப்பு ஆய்வுகள் கூடுதலாக தேவைபடுகிறது. கூடுதல் தகவல் வழங்க உள்ள பல ஆய்வுகள் தொடர்ந்து நடை பெற்று கொண்டிருகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார் மற்றும் சி. இ. பி.என்.அர் குழு