மூன்று மாதம் முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு உப உணவு: அவர்கள் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறதா?

பின்புலம்

ஊட்டச்சத்தின்மை குழந்தை இறப்பிற்கு ஒரு காரணமாக உள்ளது; அது 2011 இல் மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளது. மேலும் இதனால் நோய் தொற்று அதிகம் வரவும், குன்றிய குழந்தை வளர்ச்சி மற்றும் பள்ளி செயல்திறன், பெரியவர்கள் ஆனவுடன் நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயம் போன்றவையும் உள்ளது. எனவே இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தலையீடுகள் திறன் பற்றிய ஆதாரம் அடிப்படையில் முக்கியமானதாகும். இதுஅரசு, நிதி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் முக்கிய அடிப்படை தேவையாக இருக்கிறது.

திறனாய்வு கேள்வி

வசதியற்ற சூழலலில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உப உணவு திட்டங்கள் எப்படி பயனுள்ளதாக உள்ளன? என்னென்ன காரணிகள் அதுபோன்ற திட்டங்களின் செயல்திறனுக்கு பங்களிக்கிறது?

முறைகள்

நாங்கள் உப உணவு (உணவு, பானம்,) வழங்கப்பட்ட குழந்தைகளை அந்த உணவு பெறாத குழைந்தைகளுடன் ஒப்பிட்ட ஆய்வுகளை சேர்த்தோம்.

நாங்கள் பரந்த தேடல்களை பயன்படுத்துவது உட்பட, கவனமாக முறையான ஆய்வு முறையை மேற்கொண்டோம். குறைந்த பட்சம் இருவர் திறனாய்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபட்டனர். எங்கெல்லம் முடியுமோஅங்கெல்லாம், நாங்கள் பல ஆய்வுகளின் முடிவுகளை சேர்த்து சராசரியான விளைவை பெற பகுப்பாய்வு செய்தோம். நாங்கள் முடிவுகளின் மீது தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் காரணிகளை (குழந்தை வயது, பாலினம் மற்றும் அனுகூலமற்ற குடும்ப உணவு பகிர்வு, கொடுக்கப்பட்ட ஆற்றல் அளவு , முதலியன) கவனமாக ஆராய்ந்தோம்.

இந்த ஆதாரம் ஜனவரி 2014 நிலவரப்படியானவை.

ஆய்வுகளின் பண்புகள்

நாங்கள் 32 ஆய்வுகளை சேர்த்தோம்; 21 சமவாய்ப்பாட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள். {இதில் குழந்தைகளை துணை உணவு பெறுமாறும் (தலையீடு குழு) அல்லது துணை உணவு பெறாதவாறும் (கட்டுப்பாட்டு குழு) சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்}, 11 கட்டுபடுத்தப்பட்ட, விளைவுகளை முன் மற்றும் பின் அளவிட்ட ஆய்வுகள் (இதில் விளைவுகளை, கட்டுபடுத்தப்பட்ட குழு மற்றும் தலையீட்டு குழுவில் சமவாய்ப்பு முறையில் ஒதுக்கபடாத குழந்தைகளில் அளவிடுதல்). குழந்தைகள் எண்ணிக்கை 30 ல் இருந்து 3166 வரை பரவியிருந்திருந்தது. பெரும்பாலான ஆய்வுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலும், மூன்று ஆய்வுகள் அதிக வருமானம் உள்ள நாடுகளிலும் நடத்தப்பட்டவை.

முக்கிய கண்டுபிடிப்புகள்

நாங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், மூன்று மாதங்களுக்கு ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு கூடுதல் உணவு வழங்குவது சிறிதளவு எடை கூடுவதற்கும் (ஆண்டிற்கு 0.24 கிகி RCTs மற்றும் CBAs யில் ) மற்றும் உயரம் கூடுவதற்கும் (ஆண்டிற்கு 0.54 செமீ – RCTsயில் மட்டுமே; வேறு எந்த ஒரு ஆய்வு வடிவமைப்புகலளிலும் விளைவுகளுக்கு ஆதாரம் இல்லை ) வழிவகுத்தது என்று கண்டறிந்தோம் மற்றும் ஹீமோகுளோபின் மிதமான அளவில் அதிகரிக்கிறது என்றும் கண்டறிந்தோம். நாங்கள் உள ஆற்றல் செயற்பாடு வளர்ச்சி மீது சாதகமான தாக்கங்களை (மன மற்றும் தசை செயல்பாடு உள்ளடக்கிய திறன்கள்) ஏற்படுத்துகிறது என்று கண்டரிந்தோம். நாங்கள் மன வளர்ச்சிக்கு, உப உணவின் விளைவுகள் பற்றி கலவையான ஆதாரங்கள் இருப்பதை அறிந்தோம்.

அதிக வருமானம் உள்ள நாடுகளில் செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகள் வளர்ச்சியில் எந்த நன்மையும் கண்டறியவில்லை. ஒரு சிறந்த ஆய்வு பூர்விகக் குடிமக்களின் குழந்தைகளை கொண்diயிருந்தது

நாங்கள், உணவு வீட்டில் வழங்கப்படும் போது பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மறுவிநியோகம் ('கசிவு')செய்யப்படுகிறது என்றும் குழந்தைகள் கொடுக்கப்பட்ட ஆற்றலில் 36% மட்டுமே பயனடைந்தனர். உப உணவு நாள் பாதுகாப்பு மையங்கள் அல்லது உணவு மையங்களில் வழங்கப்படும் போது குறைந்த அளவே மறுவிநியோகம் (மிக, மிக குறைவாக கசிவு ) இருந்தது. குழந்தைகள் வழங்கப்படும் ஆற்றலில் 85% எடுத்துக் கொண்டனர் நாங்கள் வெவ்வேறு குழுக்கள் பார்த்தபோது துணை உணவு (இரண்டு வயதுக்கு கிழ்), மற்றும் ஏழை அல்லது நலல ஊட்டச்சத்து குறைவாக இருந்த அந்த இளம் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பாலின வேறுபாட்டிற்கு முடிவுகள் கலந்திருந்தன. நன்றாக கண்காணிக்கப்பட்ட மற்றும் ஆற்றலுக்கு தேவைப்படுகிற தினசரி உணவு ஒரு பெரிய விகிதம் வழங்கப்படும்போது அந்த திட்டங்கள் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருகின்றன.

சான்றுகளின் தரம்

நாங்கள் சமவாய்ப்பிட்ட கட்டுபடுத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த சான்றுகளை மிதமான தரம் என்றும் CBAs கிடைத்த சான்றுகளை குறைந்த தரம் என்றும் தீர்மானித்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. அழகு மூர்த்தி மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information