மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) உடற்பயிற்சி மற்றும் புறவிசையியக்க மூட்டசைவு 

மணிக்கட்டு குகை வழியாக செல்லும் இரண்டு பிரதான நரம்புகளுள் ஒன்று அழுத்தப்படுவதால், கை,மணிக்கட்டு, சிலநேரங்களில் முன்கை, கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகியவற்றில் கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்றவை ஏற்படும் பொதுவான நிலை மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு (Carpal tunnel syndrome) ஆகும். முற்றிய நிலையில் கை தசைகள் பலவீனமாகலாம். மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதமும், பொதுவாக அதிக அளவில் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்றபோதும், லேசான முதல் மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் அறுவை அல்லாத சிகிச்சைகளான உடற்பயிற்சி அல்லது மூட்டசைவு சிகிச்சை அளிகப்படுகிறது. 16 ஆராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட வரையறுக்கப்பட்ட மிக குறைந்த தர சான்று வினைசார் திறன், வாழ்க்கை தரம், நரம்பு சார்ந்த உடலியல் கூறளவுகள் மற்றும் பக்க விளைவுகளைக் குறைக்கவும் மற்றும் மணிக்கட்டுக் கால்வாய் கூட்டறிகுறி உள்ள நோயாளிகளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவையை அறியவும் பலவகைப்பட்ட உடற்பயிற்சி மற்றும் மூட்டசைவு தலையீடுகள் பயன் உள்ளது என்று கண்டறியப்பட்டது. மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு உடற்பயிற்சி மற்றும் மூட்டசைவு சிகிச்சையின் திறன் பற்றி அறிய. குறிப்பாக நீடிப்புத்திறன் மற்றும் நீண்ட கால தாக்கம் பற்றி அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. ஹரிஓம் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information