சீஸோபிரேனியா கொண்ட மக்களுக்கான உணவுத்திட்ட ஆலோசனை

கடுமையான மனநலக் கேடு கொண்ட மக்களில் உடல் ஆரோக்கியம் பெரும்பாலும் மோசமாக இருக்கும். பொது குடித்தொகையை விட இரண்டு மடங்கு இறப்பு விகிதங்கள் நீடிக்கின்றன. இதய நோய், சுவாச பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆரோக்கிய பிரச்னைகளின் அதிகரித்த அபாயத்தில் அவர்கள் உள்ளனர். இந்த ஆரோக்கிய பிரச்னைகளுக்கு, உயர்ந்த அளவுகளிலான புகை பிடித்தல், உடற் பருமன், உடலியல் செயல்பாடின்மை மற்றும் ஊட்டச்சத்து அற்ற உணவு உட்கொள்ளுதல் போன்ற காரணிகள் பங்களிக்கும். சீஸோபிரேனியா கொண்ட மக்களுக்கு உணவுத்திட்ட ஆலோசனை வழங்குவது அவர்களின் உணவு உட்கொள்ளல் மற்றும் ஆரோக்கியத்தில் ஒரு மேம்பாட்டிற்கு வழி நடத்துமா என்பதை தீர்மானிப்பதே இந்த திறனாய்வின் நோக்கமாகும்.

காக்ரேன் சீஸோபிரேனியா குழு சோதனைகளின் தனிச்சிறப்பு பதிவேட்டை பயன்படுத்தி 2013-ல் நாங்கள் சோதனைகளுக்கு ஒரு தேடலை நடத்தினோம். சீஸோபிரேனியா கொண்ட மக்களை, உணவுத்திட்ட ஆலோசனையோடு அவர்களின் வழக்கமான சிகிச்சை அல்லது உணவுத்திட்ட ஆலோசனை அல்லாது அவர்களின் வழக்கமான சிகிச்சைக்கு சீரற்ற ஒதுக்கீடு செய்த சோதனைகளுக்கு நாங்கள் பார்த்தோம். உணவுத்திட்ட ஆலோசனையை பிற சிகிச்சையோடு, உதாரணத்திற்கு, உடற்பயிற்சி சிகிச்சையோடு, கலவையாக கொடுக்கப்பட்ட சோதனைகளை நாங்கள் இணைக்கவில்லை.

எந்த சோதனைகளையும் எங்களால் உள்ளடக்க முடியவில்லை. தற்போது, சீஸோபிரேனியா கொண்ட மக்களுக்கு உணவுத்திட்ட ஆலோசனை திறன் மிக்கதாக இருக்குமா என்பதை தீர்மானிக்க நல்ல தரமான ஆதாரம் இல்லை. அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information