தசை ஒடுங்கள் சிகிச்சை மற்றும் தடுப்பதற்கு புறவிசை மூட்டு அசைவுகள் 

இந்த காக்ரேன் திறனாய்வு தசை ஒடுங்கலுக்கு அளிக்கப்படும் புறவிசை மூட்டு அசைவுகளின் சிகிச்சை பயனை நிர்ணயிக்கிறது.

தசை ஒடுக்கங்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்புக்காக புறவிசை அசைவுகள் வழக்கமாக கொடுக்கப்படுகிறது. அவை குறிப்பிடும்படியாக இயன்முறை சிகிசையாலர்களாலும், நோயாளிகளைப் பேனுகிரவர்களாலும் கையினால் செய்யப்படுகிறது. மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்துவதே புறவிசை அசைவு சிகிச்சையின் முதன்மை குறிக்கோளாகும். இந்த திறனாய்வின் முடிவுகள், புறவிசை அசைவுகள் தசை ஒடுக்கங்கள் வராமல் தடுப்பதிலும், வந்தபின் குறைப்பதிலும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கிறதா என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பதையே குறிக்கிறது.

தசை ஒடுங்கள் என்றால் என்ன?

தசை ஒடுங்கள் மூட்டுகளை சுற்றி விரைப்புத்தன்மை ஏற்படுத்தி அதன் இயக்கத்தை தடைபடுத்தகூடிய தண்மையுடையவை. ஒடுக்கங்கள் பொதுவாக பக்கவாதம்,தண்டுவட காயம் மற்றும் பெரு மூளைவாதம் போன்ற வாதங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகிறது, மேலும் அவை வலி, அழுத்தப்புன்கள் மற்றும் உடல் குறைபாடுகள் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இட்டுச்செல்கின்றன. 

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: இர.செந்தில் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு sendhil_geetha@yahoo.com

Tools
Information