மலேரியாவைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககளைச் சொந்தமாக்கிப் பயன்படுத்துவதை அதிகரிக்க உதவும் உத்திகள்

காக்ரேன் ஒத்துழைப்பு ஆராய்ச்சியாளர்கள் மலேரியாவைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசுவலைகளை மக்கள் தமதுடைமை யாக்குதற்கும், பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட பல்வேறு வியூகங்களின் விளைவுகளை மதிப்பீடு செய்ய ஒரு திறனாய்வு நடத்தினர். பிப்ரவரி 2013 இல் அவர்கள் இதனோடு தொடர்புடைய 10 ஆய்வுகளை அவர்கள் கண்டறிந்தனர். இவர்களின் கண்டுபிடிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு.

மலேரியா என்றால் என்ன? மற்றும் பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப் பட்ட கொசு வலைகளால் எவ்வாறு அதைத் தடுக்க முடியும்?

மலேரியா என்பது ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒரு நோய். இந்த ஒட்டுண்ணியை எடுத்துச் செல்லும் ஒரு கொசு கடிப்பதினால் ஒருநபருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர் காய்ச்சல், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் இருக்கலாம். உலக மக்கள் தொகையில் சுமார் 40% பேர் மலேரியா ஆபத்துக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வறிய நாடுகளில் வசிக்கின்றனர்.

பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகள் படுக்கையின் மீது பொருத்தப்பட்டு, தூங்குவோருக்கும் கொசுவுக்கும் இடையே ஒரு வேலியாக இருக்கும். திறன்பட மலேரியாவைத் தடுக்க, கொசு வலைகள் கொசுக்களைக் கொல்லும் அல்லது துரத்தும் ரசாயனத்தில் முக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகள் அதிக விலை யுடையதால் தேவையானவர்கள் அவற்றை சொந்தமாகப் பெறுவதை உறுதிப் படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியமாகும். சொந்தமாக கொசு வலைகள் இருந்தபோதும் மக்கள் அவற்றை சரியாக பயன்படுத்துவது இல்லை. கொசு வலைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் ஓவ்வொரு இரவும் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை முறையாகத் தொங்கவிட வேண்டும் மற்றும் போதிய அளவு பூச்சிக்கொல்லி கொண்டு பதனிடப்பட வேண்டும். வெவ்வேறு அணுகுமுறைகளால் மக்கள் கொசுவலைகளை சொந்தமாகப் வைத்திருப்பது மட்டுமில்லாமல் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துதலும் அதிகரிக்கிறதா என்பதை அளவிடுவது மிக முக்கியமாகும்.

இந்த ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்ட ஆய்வுகள் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் செய்யப்பட்டது. ஐந்து ஆய்வுகளில், பூச்சிக்கொல்லி சிகிச்சையளிக்கப்பட்ட கொசு வலைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டது அல்லது மலிவான விலையில் வாங்கவோ அல்லது முழு சந்தை விலையில் வாங்கவோ வகை செய்யப்பட்டது. ஐந்து ஆய்வுகளில்அவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதற்கான கல்வி அளிக்கப்பட்டது. உதாரணமாக வீடுகளுக்கும் நேரில் சென்று பார்வை இடுவது அல்லது வானொலி ,தொலைக்காட்சி மூலமும் சமுதாயம் மூலமும் செய்திகளைப் பரப்புவது. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் பின்வருவதைக் காட்டுகிறது:

பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகளை இலவசமாக வழங்குதல்:

- மானியத்துடன் விற்கப்படும் கொசு வலைகள் அல்லது முழு சந்தை விலையில் விற்கப்படும் கொசு வலைகள் இவற்றோடு ஒப்பிடும்போது இலவசமாக வழங்கும் கொசு வலைகளை சொந்தமான சொந்தமாக வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

- மானியதுடன் விற்கப்படும் கொசு வலைகள், முழு சந்தை விலையில் விற்கப்படும் கொசு வலைகளை ஒப்பிடும்போது மக்கள் கொசு வலைகள் உபோகித்தலில் சிறிய மாற்றம் அல்லது ஒரு மாற்றமும் இராது.

பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகள் உபோகித்தல் பற்றிய கல்வி வழங்குதல்:

-பெரியவர்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொசு வலைகள் பயன்படுத்துதல் அதிகரிக்கலாம் (கொசு வலைக்குள் தூங்குவது)

பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகள் பயன்படுத்துதலை ஊக்குவித்தல்:

-கொசு வலைகளை சொந்தமாக்குவது மற்றும் பயன்படுத்துதல் ஊக்கத்தொகைத் பெறாதவர்களை ஒப்பிடும்போது அனேகமாக சிறிய மாற்றம் அல்லது ஒரு மாற்றமும் இராது.

பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைகளை இலவசமாகவோ மானியவிலையிலோ வழங்கும் போது பக்க விளைவாக அரசு மற்றும் இந்த கொசுவலைகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் இந்த நிதியினை மற்ற முன்னுரிமை இனங்களுக்கு எடுத்துக்கொள்ளும் சிக்கலும் ஏற்படலாம். இருப்பினும் இந்த திறனாய்விற்கு உட்படுத்தப்பட்ட எந்த ஆய்வுகளும் இத்தகைய அல்லது வேறுவிதமான பக்க விளைவுகள் எற்பட்டதா என அளவிடவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. ஹரிஓம், தங்கசுவாமி மற்றும் சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information