மெட்டாஸ்டாடிக்-அல்லாத மார்பக புற்றுநோய் அறுதியீடப்பட்ட மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகளின் பயன்பாடு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

மெட்டாஸ்டாடிக்-அல்லாத மார்பக புற்றுநோய் (அதாவது, மார்பைத் தாண்டி பரவாத புற்று நோய்) கொண்ட பெண்கள் மத்தியில் உளவியல் தாக்கம், வாழ்க்கைத் தரம், மற்றும் பிழைத்திருத்தல் மீது உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகளின் விளைவு பற்றின ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்னணி

உலகெங்கும், மார்பக புற்றுநோய் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். ஒரு கவலையேற்படுத்தக்கூடிய அறுதியீடாக இருக்கும் பட்சத்தில், மார்பக புற்று நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சைஅளிக்கப்படுதலின் உளவியல் ரீதியான பின் விளைவுகளை கணிசமான ஆராய்ச்சி கண்டறிந்தது. புற்று நோய் அறுதியீடல் மற்றும் சிகிச்சை மனச்சோர்வு மற்றும் பதட்டதை ஏற்படுத்தி மற்றும் வாழ்க்கை தரத்தை குறைக்க முடியும். இதன் விளைவாக, மார்பக புற்றுநோய் அறுதியீடலுக்கு பிறகு அனுபவிக்கப்படும் உளவியல் அவலத்திற்கு உதவ பல்வேறு உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வு பண்புகள்ஆதாரம் மே 2013 வரை தற்போதையானது. ஒரு சிகிச்சை தலையீடு, ஒரு குழு அமைப்பிற்கு (குழு சிகிச்சை தலையீடு); ஒரு தெரபிஸ்ட் மற்றும் ஒரு நோயாளி இடையேயான தொடர்பு (தனிப்பட்ட சிகிச்சை தலையீடு); அல்லது நோயாளி மற்றும் அவரது வாழ்க்கைத் துணையோடு சிகிச்சை அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஜோடி சிகிச்சை தலையீடு மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். கட்டுப்பாட்டு குழு, விளக்கக் கல்வி துண்டுப் பிரசுரங்களை பெற அல்லது கருத்தரங்குகள் அல்லது தளர்வு சிகிச்சை வகுப்புகளுக்கு அணுகலை பெற்றிருக்கலாம். ஒரு விரிவான இலக்கியத் தேடல் நடத்தப்பட்டு, 3940 பங்கேற்பாளர்கள் உள்ளடக்கிய 28 ஆய்வுகள் சேர்க்கப்பட்டது. பெரும்பான்மையான சிகிச்சை தலையீடுகள் (28-ல் 24 ஆய்வுகள்), ஒரு நபரின் எண்ணங்கள் மற்றும் நடத்தையை மாற்றும் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை முறையை அடிப்படையாக கொண்டிருந்தன. நான்கு ஆய்வுகள், உளவியல் சிகிச்சையை தலையீட்டாக பயன்படுத்தின. பொதுவாக, சிகிச்சை தலையீடுகளுக்கு பின்னர் விளைவுகளை (அதாவது பதட்டம், மனச்சோர்வு, வாழ்க்கை தரம் போன்ற) மதிப்பிடும் முறைகள், மற்றும் இவை மதிப்பிடப்பட்ட நேரம் ஆகியவை ஆய்வுகள் இடையே ஒரே மாதிரியான இருக்கவில்லை.

முக்கிய முடிவுகள்

புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை பெற்ற பெண்கள், குறிப்பாக பெண்கள் குழுக்களுக்கு வழங்கப்பட்டபோது, பதட்டம், மனச்சோர்வு மற்றும் மனோநிலை இடையூறு ஆகியவற்றில் முக்கியமான குறைவுகளை காட்டினர். கட்டுபாட்டு குழுவினை ஒப்பிடுகையில், தனிப்பட்ட முறையில் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சையை பெண்கள் பெற்ற போது, வாழ்க்கைத் தரத்தில் ஒரு முன்னேற்றம் காணப்பட்டது. கண்டுப்பிடிப்புகள் துல்லியமற்று இருந்தபடியால், பிழைத்திருத்தலின் மீதான விளைவுகள் நிச்சயமற்றதாக உள்ளன.

நான்கு உளவியல் சிகிச்சை ஆய்வுகள், ஒவ்வொரு விளைவு பற்றி மட்டுப்படுத்தப்பட்ட தகவலை பதிவு செய்தன. எனவே, உளவியல் சிகிச்சையின் பலாபலன் பற்றி எந்த உறுதியான முடிவும் செய்ய முடியவில்லை.

சேர்க்கப்பட்டிருந்த எந்த ஆய்வுகளிலும், தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் பற்றி தகவல் அறிக்கையிடப்படவில்லை.

சிகிச்சையை இடைநிறுத்திய பிறகு, இந்த சிகிச்சைகளின் விளைவுகள் நிலையானதாய் இருக்குமா என்பதை பற்றி மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க கூடிய ஆதாரத்தை மேற்படியான ஆராய்ச்சி வழங்குவதை நோக்கமாக கொள்ள வேண்டும்.

சான்றின் தரம்

ஆதாரத்தின் தரம், மிக குறைவிலிருந்து (எடுத்துக்காட்டிற்கு, வாழ்க்கைத் தரம், தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தலையீடு) மிதமான தரம் (மனோநிலை இடையூறு) வரைக்கும் வேறுப்பட்டது. ஆய்வு முறைகள், விளைவு அளவுகளின் நேரம், மற்றும் கட்டுப்பாடு குழுக்கள் உள்ளே பெறப்பட்ட சிகிச்சையை போன்றே சிகிச்சை தலையீடுகளும் ஆய்வுகள் இடையே வேறுப்பட்டன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.