காசநோய்க்கான திரையிடல் திட்டங்கள்

காசநோய் (டிபி) என்பது ஒவ்வொரு வருடமும் தொண்ணூறு லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிக்கும் ஒரு கடுமையான தொற்று வியாதியாகும். காசநோய் நோயாளிகளின் தொற்று கொண்ட நுரையீரல்களிலிருந்து எழும்பும் காற்றுவழி திவலைகள் மூலம் இது பரவும். திறன்மிக்க நுண்ணுயிர் கொல்லி சிகிச்சைகள் ஒரு பரந்தளவில் கிடைக்கப் பெற்றாலும் இந்த வியாதி அநேக வளக்-குறைவான அமைப்புகளில் இன்னும் பொதுவாக காணப்படுகிறது. நிரூபிக்கப்பட்ட காசநோயைக் கொண்ட மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அனைவரின் முறைப்படுத்தப்பட்ட திரையிடல், காசநோயை முன்கூட்டியே கண்டுப்பிடிப்பதை அதிகரிக்குமா என்பதை தீர்மானிக்க இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்க ஏதுவான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தற்போது எதுவும் இல்லை என இந்த திறனாய்வு கண்டது, மற்றும் காசநோய்க்கான திரையிடல் திட்டங்கள், காசநோய் நோயாளிகளின் தொடர்புகளுக்கிடையே அறுதியிடல் விகிதங்களை அதிகரிக்குமா அல்லது சமூகத்தில் காசநோயின் விகிதத்தைக் குறைக்குமா என்பதற்கு பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது. ஆதலால், காசநோய் நோயாளிகளின் தொடர்புகளில் முறைப்படுத்தப்பட்ட திரையிடலின் நன்மைகளை தீர்மானிக்க மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information