ஆஸ்துமா கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கான வீடு-சார்ந்த விளக்கக் கல்வி சிகிச்சை தலையீடுகள்

ஆஸ்துமா என்பது நெஞ்சிரைப்பு, இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை உண்டாகும் ஒரு பொதுவான குழந்தை பருவ நோயாகும். ஆஸ்துமா கொண்ட குழந்தைகளின் பராமரிப்பு வழிகாட்டல்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அவர்களின் நிலையை எவ்வாறு சமாளித்து கொள்ளவது என்பது பற்றிய விளக்கக் கல்வியை பெறுதல் வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. வீட்டில் பெற்ற ஆஸ்துமா விளக்கக் கல்வியோடு வழக்கமான பரமரிப்பு அல்லது ஒரு குறைந்த தீவிரம் கொண்ட வீடு-சார்ந்த விளக்கக் கல்வி திட்டத்துடன் ஒப்பிட்ட மொத்தம் 2342 குழந்தைகளைக் கொண்ட 12 ஆய்வுகளை இந்த திறனாய்வு பார்த்தது. 12 சோதனைகளில் 11, வட அமெரிக்காவில், பின்தங்கிய சமுக பொருளாதார குடும்பங்கள் சம்மந்தப்பட்ட நகர்புற அல்லது ஊர் நகர அமைப்புகளில் நடத்தப்பட்டது. விளக்கக் கல்வியின் சில முக்கிய அங்கங்களை, ஒரு அட்டவணையில் சுருக்கியுள்ளதை இந்த திறனாய்வில் நாங்கள் அளிக்கிறோம்.

சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில், குழந்தைகளின் இயல்புகள் (எடுத்துக்காட்டு: வயது, ஆஸ்துமாவின் தீவிரம்), அளிக்கப்பட்ட விளக்கக் கல்வி மற்றும் ஒவ்வொரு விளைவும் அறிக்கையிடப்பட்டிருந்த விதம் ஆகியவற்றில் வேறு பட்டிருந்தன. இது, முடிவுகளை ஒப்பிடுவதையும் மற்றும் ஒட்டுமொத்த முடிவுகளை வழங்குவதையும் கடினமாக்கின, மற்றும் பெரும்பாலான விளைவுகளுக்கு நாங்கள் முடிவுகளை ஒன்றிணைக்கவில்லை. தனிப்பட்ட சோதனைகளின் முடிவுகளிலும் வேறுபாடு இருந்தன. ஒவ்வொரு குழந்தையிலும் சராசரி அவசரநிலை மருத்துவ அமர்வுகளை அறிக்கையிட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை எங்களால் இணைக்க முடிந்தது, அவை, ஆறு மாதங்களில், வீடு விளக்கக் கல்வி குழுவிற்கும் மற்றும் வழக்கமான பராமரிப்பு குழுவிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றன. வாய்வழி கார்ட்டிகோ-ஸ்டீரோயிட்கள் தேவைப்பட்ட நோய்-அதிகரித்தல் என்ற எங்களின் பிற முதன்மை விளைவிற்கு ஒரே ஒரு சோதனை பங்களித்தது. மருத்துவமனை அனுமதிப்புகளும், சோதனைகளிடையே பரந்த வேறுபாட்டை கொண்டிருந்தது, மற்றும் சில சோதனைகளில், இரண்டு திசைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருந்தது. விளக்கக் கல்வி மற்றும் கட்டுப்பாடு குழுக்கள் இரண்டிலும், வாழ்க்கைத் தரம் மேம்பட்டு இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information