புற்று நோய் கொண்ட நோயாளிகளில் இருமலுக்கான சிகிச்சை தலையீடுகள்

புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இருமல் ஒரு கவலையேற்படுத்தக் கூடிய அறிகுறி ஆகும், மற்றும் நடைமுறையில் சமாளிப்பது கடினமாகும். எனவே, நடைமுறை பரிந்துரைகளை மேம்படுத்தும் பொருட்டு, புற்று நோயாளிகளுக்கான இருமல் மேலாண்மையில் கிடைக்கப் பெறும் இலக்கியத்தை மதிப்பிட்டு மற்றும் தொகுப்பதற்கு இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை சம்மந்தமான ஆய்வுகள் நீக்கப்பட்டன. ஒரு விரிவான இலக்கிய தேடல், 17 ஆய்வுகளை மதிப்பீடு செய்வதற்கு அளித்தது. இந்த மேம்படுத்தலில் சேர்ப்பதற்காக எந்த கூடுதல் ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை. எட்டு ஆய்வுகள், ப்ரேகிதெரபி ( நுரையீரல் புற்றுநோய்க்கு, ஒரு கதிர்வீச்சு ஆரம்ப மூலம் நுரையீரலில் மூச்சுக் குழாயின் உள்ளே வைக்கப்பட்டு அல்லது முறையான சிகிச்சை தேவைப்படும் பகுதிக்கு பக்கத்தில் வைக்கும் தொழில்நுட்பம்) பயன்பாடு பற்றி இருந்தன, லேசர் வெட்டல் அல்லது போட்டோடைனமிக் தெரபி (புற்று நோய் திசுக்களை கொல்ல, ஒரு மருந்துடன் சிறப்பு வகையான ஒளியை பயன்படுத்தும் ஒரு சிகிச்சை) பயன்பாடு பற்றி இருந்தன. ஒன்பது ஆய்வுகள், கோடின் மற்றும் மார்பின் உட்பட பல்வேறு மருந்துகளின் பல விளைவுகளை மதிப்பிட்டன. ஒட்டுமொத்தமாக, ஆராய்ச்சியின் தரம் குறைவாக, செயல்முறையியல் பிரச்சனைகளோடு இருந்தது, எனவே இலக்கியத்திலிருந்து, நடைமுறை பயிற்சிக்கு எந்த ஒரு நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை. இந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, பல்வேறு கதிர்வீச்சு அளவுகளில் ப்ரேகிதெரபி தேர்ந்தெடுக்கபட்ட சில நோயாளிகளில் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வுகளும் குறிப்பிட தகுந்த ஒரு தலை சார்பு அபாயத்தை மற்றும் சில பக்க விளைவுகளை பதிவு செய்திருந்தாலும், சில மருந்து ரீதியான சிகிச்சைகள், குறிப்பாக, மார்பின், கோடின், டைஹைட்ரோகோடின் , லேவடரோப்ரோப்சைன் , சோடியம் குரோமோக்லைகேட் மற்றும் புட்டாமைரட் சிட்ரய்ட் லின்டஸ் (ஒரு திரவ இருமல் மருந்து) ஆகியவை பயனுள்ளதாக இருந்தன என கண்டறியப்பட்டுள்ளது. இந்த திறனாய்விலிருந்து நடைமுறை பரிந்துரைகள் ஏதும் வரையப்படவில்லை. புற்றுநோயில், இருமல் மேலாண்மையின் சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பீடு செய்ய ஆய்வுகளின் எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்துவது ஒரு அவசர தேவையாய் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information