இளம்பிள்ளைவாதத்திற்குப் பின் ஏற்படும் கூட்டறிகுறிக்கான (postpolio syndrome-PPS) சிகிச்சை

திறனாய்வு கேள்வி

இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பிற்குப் பின்னர் ஏற்படும் நோய்க்கூட்டறிகுறிக்கான பல்வேறு சிகிச்சைகளின் விளைவுகள் என்ன?

பின்னணி

PPS என்பது ஆரம்பகாலத்தில் போலியோ வைரஸ்சினால் தாக்கப்பட்டு வாதத்தினால் பீடிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ஆண்டுகள் பல கடந்தும் பாதிப்பிற்குள்ளாகும் நிலைமை ஆகும். PPS முன்னர் தாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாததுபோல் தோன்றும் தசைகளில் கூடுதல் அல்லது புதிய தசை நார்களில் தளர்ச்சி அல்லது அயர்வை ஏற்படுத்தும் இயல்பை உடையது. பொதுவான இளைப்பு மற்றும் வலி இதன் மற்ற அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் நடந்து செல்வதில் இடர்ப்பாடு போன்ற உடல் செயல்பாட்டின் சரிவிற்கு வழிவகுக்கும். பல்வேறு மருந்துகள் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சையின் பலன் மற்றும் பாதகங்களை போலி சிகிச்சை (உடல் இயக்கத்தில் எந்தவொரு விளைவையும் ஏற்படுத்தாத மருந்து அல்லது செய்முறை), வழக்கமான சிகிச்சை அல்லது எந்த சிகிச்சையையும் மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பீடு செய்வதே இந்த திறனாய்வின் நோக்கம் ஆகும்.

ஆய்வு பண்புகள்

ஜூலை 2014 வரை , PPSக்கு சிகிச்சை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை நாங்கள் விஞ்ஞான தரவுத்தளத்தில் தேடினோம். 675 பங்கேற்பாளற்கள் பங்கேற்ற போதுமான தரத்தை உடைய 13 ஆய்வுகளை நாங்கள் இந்த திறனாய்வில் உள்ளடக்கினோம். பத்து ஆய்வுகள் மருந்துகளின் செயல்பாடு பற்றியும்(மோடபினில் (modafinil), சிரை வழி நோய் எதிர்ப்பு புரதம் (IVIg), பிரிடோஸ்டிக்மின், லாமோட்ரைஜின், அமன்டடின், பிரெட்னிசோன்) மற்ற மூன்று ஆய்வுகள் மற்ற சிகிச்சை முறைகளின் (தசைகளை வலுப்படுத்துதல், வெதுவெதுப்பான தட்பவெப்ப நிலையில் (அதாவது உலர்ந்த மற்றும் ஒளிமிக்க ± 25°C வெப்பநிலை) மற்றும் குளிரான காலநிலையில் (மழை அல்லது பனி பொழியும் ± 0°C) புனர்வாழ்வு சிகிச்சை, அசையா காந்தமண்டலம்) செயல்பாடு பற்றியும் மதிப்பீடு செய்தன.

பிரதான முடிவுகள் மற்றும் சான்றுகளின் தரம்

IVIg- யால் செயல்திறன் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதில் குறுகிய மற்றும் நீண்ட கால வரம்புகளில் எந்தவொரு சாதகமான விளைவும் ஏற்படவில்லை என்று மிதமான மற்றும் தரம் குறைவான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வுகளில் மாறுபட்ட முடிவுகள் காணப்பட்டமையால், தசைகளை வலுப்படுத்துதலின் செயல்திறன் பற்றிய சான்றுகள் முரண்படுகின்றன . IVIg சிகிச்சையில் கணிசமான பங்கேற்பாளர்களிடம் சிறிய அளவிலான பக்க விளைவுகள் காணப்படுகின்றன.

லாமோட்ரைஜின் என்னும் மருந்தானது சில வகையான காக்கை வலிப்பை கட்டுப்படுத்தவும், இரு துருவ உளவியல் கோளாறுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வலி மற்றும் சோர்வை குறைப்பதினால் சிறிய அளவில் செயல்திறன் கட்டுப்பாட்டை குறைகின்றது என்று ஒரு ஆய்வில் மிகவும் தரம் தாழ்ந்த ஆதாரம் தெரிவிக்கிறது. இந்த மருந்து ஏற்புமை உடையதாகவும் காணப்படுகிறது. ஆய்வு வடிவமைப்பில் வரம்பு எல்லைகள் உடைய ஒரு சிறிய சோதனையின் அடிப்படையில் இந்த முடிவுகளை நாங்கள் எடுத்து உள்ளோம்.

கட்டைவிரல் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் பாதுகாப்பானது மற்றும் தசை வலிமையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று மிகவும் தரம் குறைந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வு வடிவமைப்பில் வரம்பு எல்லைகள் உடைய ஒரு சிறிய சோதனையின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை மீண்டும் எடுத்து உள்ளோம். மேலும் இந்த முடிவுகள் கட்டை விரல் தசைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அசையா காந்தமண்டலம் என்னும் சிகிச்சையானது வலியைக் குறைக்கும் நோக்கத்தோடு தோலில் பிரயோகப்படுத்தப்படும் மின் ஓட்டம் ஆகும். நேரடியான சிகிச்சைக்குப் பிறகு வலியைக் குறைப்பதில் அசையா காந்தமண்டலம் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று மிதமான தரமுள்ள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்த சிகிச்சையின் செயல்திறன் கட்டுப்பாடு பற்றிய செயல்சார் விளைவுகள் மற்றும் நீண்ட கால விளைவுகள் பற்றி தெரியவில்லை.

இறுதியாக, PPS சிகிச்சைக்கு மோடபினில், பிரிடோஸ்டிக்மின், அமன்டடின், பிரெட்னிசோன் மற்றும் வெதுவெதுப்பான அல்லது குளிரான தட்பவெப்ப நிலையில் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு ஆகியவற்றின் செயல்பாடு பயனுள்ளதாக இல்லை என்று மிகவும் தரம் தாழ்ந்தது முதல் உயர்வான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கோ. ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information