புற்றுநோயில் பிழைத்த வயது வந்தவர்களுக்கான பன்முக புனர்வாழ்வுத் திட்டங்கள்

கண்டறிதல், சிகிச்சை மேம்பாடுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக புற்றுநோயுடன் வாழ்ந்து அல்லது பிழைத்துக் கொண்டிருக்கிற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளார்கள். எனினும், புற்றுநோயில் பிழைத்த நோயாளிகள் தங்கள் ஆரோக்கிய மற்றும் வாழ்க்கை தரத்தை தாக்கும் ஒரு வேறுபட்டஉடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகளை அனுபவிக்கலாம். உடல் அறிகுறிகள், சோர்வு, குறைக்கப்பட்ட தசை வலிமை மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை அடங்கும், அதேநேரத்தில் உணர்ச்சி அறிகுறிகள், எடுத்துக்காட்டாக , கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை அடங்கும். இந்த அறிகுறிகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க, மற்றும் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கை தரம் சிறக்க உதவுவதற்காகவும் புனர்வாழ்வு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. சில புனர்வாழ்வுத் திட்டங்கள் மக்கள் உடல் அல்லது உணர்ச்சி அறிகுறிகளில் ஒன்றில் தொடர்புடைய சிக்கல்களை சமாளிக்க உதவ முயற்சித்தது, அதே நேரத்தில் மற்ற திட்டங்கள் -பன்முக புனர்வாழ்வுத் திட்டங்கள் (எம்டிஆர்பி-கள்), உடல் மற்றும் உணர்ச்சிகளின் அறிகுறிகளை ஒன்றாக தீர்க்க முயற்சித்தது. எந்தளவுக்கு இயல்பாக புற்றுநோயில் பிழைத்த வயது வந்தவர்களில், MDRP உடல் மற்றும் உணர்ச்சி பிரச்சனைகளை குறைக்கிறது மற்றும் ஆரோக்கிய தொடர்புடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது என்பதை மதிப்பீட கிடைக்ககூடிய சிறந்த ஆராய்ச்சிகளை சேகரித்து இந்த திறனாய்வு ஆய்வு செய்தது.

இந்த திறனாய்விற்கு பயன்படுத்த ஏற்றதாக இருந்த 12 ஆய்வுகளை அடையாளம் கண்டோம். எனினும், ஒவ்வொரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு இருந்த அந்த வழியில் சில பிரச்சனைகள் இருந்தன. இந்த பிரச்சினைகள் MDRP பயனை பற்றி குறிப்பிட்டு சொல்வதைக் கடினமடையச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக, திறனாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள், எம்டிஆர்பி-கள் , நோயாளிகளின் உணர்ச்சி தேவைகளை விட உடல் தேவைகளை சமாளிக்க உதவ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று பரிந்துரைக்கின்றன. நோயாளிகளின் உணவுக்கட்டுப்பாடு , உடல் செயல்பாடு அல்லது மன அழுத்தம் போன்ற ஒரு குறிப்பிட்ட நடத்தை பகுதியில் கவனம் கொண்ட, எம்டிஆர்பி நிரல்கள், பல்வேறு நடத்தைகளை முயன்றிருந்த நிரல்களை விடவும் அதிகமான பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. வெற்றிகரமான எம்டிஆர்பி-கள் பொதுவாக ஒரு நோயாளி மற்றும் ஒரு தொழில்முறை ஆரோக்கிய நிபுணர் (பொதுவாக ஒரு நர்ஸ் அல்லது உடல் சிகிச்சை நிபுணர் ) இடையே நேருக்கு நேர் தொடர்பை உள்ளடக்கியது மற்றும் குறைந்தது ஒரு பின்தொடர்ந்த தொலைபேசி அழைப்பை உள்ளடக்கியிருந்தது. சுருக்கமாக, கலப்பு புற்று நோயாளி குழுக்களுக்களில் கவனம். அளித்த எம்டிஆர்பி-கள் விட எந்த திட்டங்கள் நீண்ட காலத்துக்கு நடக்கின்ற (ஆறு மாதங்களுக்கு மேல்) , அல்லது இன்னும் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய தொழில்முறையாளர் மூலம் வழங்கப்படுகின்ற அல்லது ஒரு புற்றுநோய் கொண்ட பகுதிக்கு வழங்கப்படுகின்ற நிரல்கள் வெற்றி பெறவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம்,சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information