மூளை காயத்தின் குறுகிய கால மேலாண்மை மற்றும் புனர்வாழ்விற்கான குத்தூசி சிகிச்சை

மூளை காயத்தின் குறுகிய கால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு (அல்லது இரண்டிற்கும்) குத்தூசி சிகிச்சையை பயன்படுத்துவது பற்றி சீனாவில் ஆராயப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலைமைகளின் மேல், குத்தூசி சிகிச்சையின் பலாபலன் மற்றும் பாதுகாப்பு பற்றி அளவிட நாங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை நடத்தினோம். 294 பங்கேற்பாளர்களை கொண்ட நான்கு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் இந்த திறனாய்வில் சேர்ப்பதற்கான தகுதியை கொண்டிருந்தன. மூன்று ஆய்வுகள் மூளைக் காயத்திற்கு மின்-குத்தூசி சிகிச்சையை சோதித்தன, ஒன்று குறுகிய கால மூளைக் காயத்திற்கு சோதித்தது. ஆய்வுகள் குறைந்த செயல்முறையியல் தரத்தை கொண்டிருந்தன; மற்றும் அவை நோக்கங்கள், பங்கேற்பாளர் இயல்புகள், குத்தூசி சிகிச்சை முறைகள் மற்றும் யுக்திகள், மற்றும் விளைவு அளவீடுகள் ஆகியவற்றில் மாறுப்பட்டிருந்தன. சிறிய எண்ணிக்கையிலான மற்றும் அதனுடன் குறைந்த செயல்முறையியல் தரம் கொண்ட ஆய்வுகள் என்பது என்றால், மூளைக் காயத்திற்கு குத்தூசி சிகிச்சையின் பலாபலன் மற்றும் பாதுகாப்பு பற்றி எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு போதுமான ஆதாரமில்லை என்பதாகும். ஆதாரம்-சார்ந்த முடிவுகள் உற்பத்தியாவதற்கு, மேற்படியான சிறப்பான செயல்முறையியல் தரம் கொண்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information