நீண்ட -கால உடல்நல குறைவுகளுக்கான சுய-மேலாண்மையை எளிதாக்க கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புதல்

ஆஸ்துமா அல்லது நீரிழிவு நோய் போன்ற நீண்ட-கால நிலைமைகளால் அநேக மக்கள் அவதிப்படுகின்றனர். நீண்ட-கால உடல்நல குறைவுகளோடு வாழ்வதை முடிந்த மட்டும் எளிதாக்குவதற்கு, மக்கள் அவர்களின் நிலைமைகளின் அறிகுறிகளை சீராக கண்காணிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை பொருத்தமாக்கி கொள்ள வேண்டும். குறுந் தகவல் சேவை (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ், எஸ்எம்எஸ்) மற்றும் பல்லூடக தகவல் சேவை (மல்டி மீடியா மெசேஜ் சர்வீஸ், எம்எம்எஸ்) போன்ற கைத் தொலைப்பேசி பயன்பாடுகள், மக்கள் அவர்களின் நீண்ட-கால உடல்நல குறைவுகளை சமாளிப்பதற்கு, மருந்துகள் நினைவூட்டல்கள் அல்லது ஆதரவளிக்கும் தகவல்களை அனுப்புவதற்கு அல்லது அவர்களின் ஆரோக்கிய பராமரிப்பு வழங்குபவர்களோடு முக்கியமான தகவலை பரிமாறிக் கொள்வதற்கு மற்றும் பின்னூட்டலை பெறுவதற்கான ஒரு வழியாக ஆதரவு அளிக்குமா என்பதை இந்த திறனாய்வு ஆராய்ந்தது.

சில விளைவுகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை காண முடியாமல் போனாலும், இந்த வகையான பயன்பாடுகள், சில நிபந்தனைகளின் கீழ், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா கொண்ட நோயாளிகளின் ஆரோக்கிய நிலை மற்றும் அவர்களின் சொந்த மருத்துவ நிலைமையை அவர்களே நிர்வகித்துக் கொள்ளும் அவர்களின் திறனின் மீது ஒரு நேர்மறையான தாக்கங்களை கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு மிதமான ஆதாரத்தை நாங்கள் கண்டோம். இரண்டு ஆய்வுகளில், பங்கேற்பாளர்கள் கைத் தொலைப்பேசி தகவல் ஆதரவை நேர்மறையாக மதிப்பிட்டனர் என்பதற்கு மிக குறைந்த தர ஆதாரம் இருந்தது. மேலும், இரண்டு ஆய்வுகளில்: ஆரோக்கிய சேவைகளை பயன்படுத்தி கொள்வதில், கைத் தொலைப்பேசி தகவல் ஆதரவை பெற்ற நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஆதரவை பெறாதவர்கள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை (ஒரு ஆய்வு); மற்றும் தகவல்கள் பெறாதவர்களை விட, குறுந்தகவல்களை பெற்ற ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரை அநேகந் தரம் சந்தித்தனர், ஆனால் மருத்துவமனையில் குறைந்த தடவைகள் அனுமதிக்கப்பட்டனர் (ஒரு ஆய்வு) என்பதற்கு மிக குறைந்த தர ஆதாரம் இருந்தது.

இந்த ஆய்வுகளில் சிறிய எண்ணிக்கையிலான ஆய்வு மக்கள் உள்ளடங்கிய காரணத்தினால், ஆதாரம் மிக உறுதியாக இல்லை. மேலும், நீண்ட-கால நிலைமைகளின் சுய-மேலாண்மைக்கு, கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புவதை நீடிக்கப்பட்ட கால அளவுகளுக்கு பயன்படுத்துவதின் பயன் மற்றும் சாத்தியமான எதிர்மறை பின் விளைவுகள் பற்றி இன்னும் தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information