மூட்டு உருக்குலைவினைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், தசை இளக்கல் (Stretching) திறனுடையதா?

திறனாய்வுக் கேள்வி: மூட்டு உருக்குலைவு உள்ளவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்குத் தசை இளக்கல் (stretch) சிகிச்சையின் திறன் பற்றிய ஆதாரங்களை நாங்கள் ஆய்வு செய்தோம்.

பின்புலம்: நரம்பியல் அல்லாத மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு மூட்டு உருக்குலைவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு, தசை இளக்கல் சிகிச்சை முறைகள் எவ்வளவு திறனானவை என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பினோம். தீக்காயங்கள், கீல்வாதம், மூளை காயம், பக்கவாதம், எலும்பு முறிவு போன்ற மருத்துவ நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டனர்.

தசை இளக்கல் சிகிச்சையானது சிம்பு(splints) மற்றும் நிலைப்படுத்தல் திட்டம், அல்லது தொடர் வார்ப்பு(serial casts) செயல்முறை உத்திகள் மூலம் அளிக்கப்படலாம். மாற்றாக,தசை இளக்கள் சிகிச்சை சுயமாக அல்லது சிகிச்சையாளர்கள் மூலம் கைமுறையாக அளிக்கலாம்.

ஆய்வு பண்புகள்: இந்த திறனாய்வில் உள்ள ஆதாரம் நவம்பர் 2015 நிலவரப்படியானது. இந்த திறனாய்வு 2135 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 49 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை சேர்த்துள்ளது. தீக்காயங்கள், கீல்வாதம், முதுகு தண்டுவடகாயம், மூளை காயம், பக்கவாதம், மணிக்கட்டு எலும்பு முறிவு போன்ற பலதரப்பட்ட நரம்பியல் அல்லாத மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் இந்த ஆய்வுகளில் பங்கேற்றனர்

ஆராய்ச்சிகள் தசை இளக்கல் சிகிச்சையுடன் தசை இளக்கல் சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிட்டன. இது வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சையுடனும் அல்லது ஸ்பாஸ்டிசிட்டி உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி அல்லது பொட்டுலினியம் நச்சு ஊசி போன்ற சிகிச்சையுடன் அளிக்கப்பட்டது.

பங்கேற்பில்லா இளக்கல் (சுயமாக அல்லது சிகிச்சையாளர்கள் மூலம் மற்றும் சாதனம் முலம் செய்தல்), இருக்கை நிலை, சிம்பு அணிவது மற்றும் தொடர் வார்ப்பு(serial casting) போன்ற பலதரப்பட்ட முறைகள் முலமாக தசை இளக்கல் சிகிச்சை செய்யப்பட்டது.

தசை இளக்கல் சிகிச்சை அளவு அதிகம் மாறுபட்டிருந்தது. சிகிச்சை நேரம் ஒரு நாளைக்கு 5 நிமிடம் முதல் 24 மணி நேரம் வரை பரவி இருந்தது.(இடைநிலை 420 நிமிடங்கள், IQR 38 முதல் 600 வரை). தசை இளக்கல் அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த நேரம் நேரம் 23 நிமிடத்தில் இருந்து 1456 மணி நேரங்கள் வரையிருந்தது (இடைநிலை 168 மணி நேரங்கள், IQR 24 முதல் 672 வரை).

மூட்டு இயக்க வரம்பு, ஸ்பாஸ்டிசிட்டி, வலி, வாழ்க்கை தரம்,நகரும் திறன், வாழ்க்கையில் பங்கேற்கும் திறன் மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் போன்ற விளைவுபயன் இதில் உபயோகிக்கப்பட்டது. குறுகிய காலக்கட்டம் (ஒரு வாரத்திற்கு குறைவாக) அல்லது நீண்ட கால (ஒரு வாரத்திற்கு மேல்) திறன் பற்றி தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் நிதி மூலம்: வணிக அக்கறை உள்ள எந்த ஒரு மருந்து உற்பத்தியாளரோ அல்லது ஒரு நிறுவனமோ இந்த ஆய்வுகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை.

முதன்மை முடிவு: தசை இளக்கல் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்களை , தசை இளக்கல் சிகிச்சை எடுக்காதவர்களுடன் ஒப்பிட்ட ஆய்வுகளில் இருந்து, கடைசியாக செய்யப்பட்ட தசை இளக்கல் சிகிச்சைக்கு பின்னர் ஒருவாரம் கழித்து அதன் குறுகிய காலக்கட்ட தாக்கம் பற்றி பின்வருவனவற்றை நாங்கள் கண்டறிந்தோம்:

மூட்டு இயக்கம் (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த வாழ்க்கைத் தரம்):

நரம்பியல் நோய்: தசை இளக்கல் , மூட்டு இயக்கத்தை 1% மேம்படுத்தும் (0% முதல் 2% மேம்பட்டது) அல்லது 2 ° (0 ° 3 ° )

நரம்பியல் அல்லாத நோய்களில்: தசை இளக்கல் மூட்டு இயக்கத்தை 1% மேம்படுத்தும் 1% (0% முதல் 3% மேம்பட்டது)

வாழ்க்கைத் தரம் (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த வாழ்க்கைத் தரம்):

நரம்பியல் தொடர்பான நோய்களில: ஆய்வுகள் எதுவும் இல்லை

நரம்பியல் அல்லாத நோய்களில்: தசை இளக்கல் வாழ்க்கை தரத்தை 1% மேம்படுத்தும் (0% முதல் 3% மேம்பட்டது)

வலி (குறைந்த மதிப்பெண் என்றால் சிறப்பான விளைவுபயன்):

நரம்பியல் நோய்கள்: தசை இளக்கல் வலியை 2%அதிகரிக்கும் (1% முதல் 6% வரை மோசமாகும்).

நரம்பியல்- சாரா நோய்கள்: தசை இளக்கல் வலியை 1% குறைக்கும் (3% மேம்பாட்டிலிருந்து 1% மோசமாக்கல் வரை).

செயல்திறன் தடை (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த விளைவுபயன்)

நரம்பியல் தொடர்பான நோய்களில்: தசை இளக்கல் நடவடிக்கைகளை செய்யக் கூடிய திறன் 1% மேம்படுத்தும் (0% முதல் 2% மேம்பட்டது)

நரம்பியல் அல்லாத நோய்களில்: தசை இளக்கல் சிகிச்சை அசையும் திறனை 1% மேம்படுத்தும் (2% மோசமாவது முதல் 4% மேம்பட்டது).

வாழ்க்கைத் தரம் (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த வாழ்க்கைத் தரம்):

நரம்பியல் தொடர்பான நோய்களில: ஆய்வுகள் எதுவும் இல்லை

நரம்பியல் அல்லாத நோய்களில்: தசை இளக்கல் 12% வாழ்க்கை நிகழ்வுகளில் பங்கேற்றலை குறைக்க கூடும் (31% மோசமாவது முதல் 6% மேம்பட்டது)

தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள்

நரம்பியல்அல்லாத கோளாறுகள் மற்றும் நரம்பியல் கோளாறு: தோல் முறிவு (skin breakdown). வலி, இரத்தக் குழாய்க் கட்டி, திசு சிதைவு தொற்று, இரத்தக்கட்டு, வீக்கம், உணர்வின்மை மற்றும் மடக்கல் பற்றாக்குறைகள் (flexion deficits) போன்ற 49 பாதகமான நிகழ்வுகள் தெரிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து ஆராய்ச்சிகளிலும் மற்றும் கட்டுப்பாட்டு குழு மற்றும் சிகிச்சை குழுக்களில் இரண்டிலும் பாதகமான நிகழ்வுகள் பற்றி தெரிவிக்கப்படவில்லை இதனால் உருவாகக்கூடிய இது போன்ற நிகழ்வுகளின் அபாயத்தை கணக்கிட எங்களால் முடியவில்லை.

சான்றின் தரம்: நரம்பியல் சம்பந்தப்பட்ட மற்றும் நரம்பியல்அல்லாத கோளாறுகளில் தசை இளக்கல் சிகிச்சை மூட்டு இயக்கத்தில் குறுகிய காலக்கட்டத்தில் மருத்துவரீதியாக முக்கியமான பயன் அளிக்காது என்று கூறும் உயர்தர சான்று உள்ளது அதேபோல் தசை இளக்கல் சிகிச்சை குறுகிய காலக்கட்டத்தில் வலிதொடர்பாக மருத்துவரீதியாக முக்கியமான பயன் அளிக்காது என்று கூறும் உயர்தர சான்று உள்ளது, மற்றும் நரம்பியல்அல்லாத கோளாறுகள் உள்ளவர்களில் வாழ்க்கை தரத்தை குறுகிய காலக்கட்டத்தில் தசை இளக்கல் சிகிச்சை மேம்படுத்தாது என்பதற்கு மிதமான- தரம் கொண்ட ஆதாரங்கள் உள்ளன.

முடிவுகள்: தசை ஒடுங்கல் தடுத்தலுக்கு அல்லது சிகிச்சைக்கு தசை இளக்கல் சிகிச்சை திறனானது இல்லை மற்றும் நரம்பியல் அல்லாத நோய் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் மற்றும் வலியின் குறுகிய காலக்கட்டத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது. நரம்பியல் கோளாறு மற்றும் நரம்பியல்அல்லாத கோளாறுகள் உள்ளவர்களுக்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்தில் மற்ற விளைவுபயனிலும் தாக்கம் பற்றி தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. ஹரிஒம், வை. பிரகாஷ், மற்றும் ஐ.சி.பி.என்.அர் குழு

Tools
Information