குறைப்பிரசவத்தைத் தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் தளர் சிகிச்சை (relaxation therapy)

குறைப்பிரசவ குழந்தை பிறப்பில்,கருவுற்று37 வாரங்களுக்கு முன் பிறக்கும் ஒரு குழந்தையின் உடல்நலம் மற்றும் தொடர்ந்து உயிர் வாழ்வதில் ஒரு தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைக்குத் தீவிரமான பிரச்சனைகளான மூச்சுத்திணறல். நோய் தொற்றுகள், பிறவி இதய கோளாறுகள் மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் பிரச்சனைகள் வரலாம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைப்பிரசவகால வலி மற்றும் குறைபிரசவத்தின் முன்கணிப்பு ஆகும். நாங்கள் அத்தகைய குறைபிரசவ வலியினைத் தடுக்கவும் அல்லது அதற்குசிகிச்சை அளிக்கவும் அல்லது குறைப்பிரசவத்தைத் தடுக்கவும், தியானம், மசாஜ், யோகா, ரிப்ளெக்ஸ்ஸாலஜி, மூச்சு பயிற்சிகள், காட்சிப்படுத்தல், இசை சிகிச்சை, வாசனைகள் மூலம் சிகிச்சை போன்ற மனத்தளர்வு அல்லது மனம் மற்றும் உடல்சார் சிகிச்சைகளின் திறன்களை ஆய்வு செய்தோம். நாங்கள் மருத்துவ ஆய்வுகளிலிருந்து தகவல் சேகரிக்க, மருத்துவ இலக்கியங்களை தேடியதில்11 சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில் எங்கள் திறனாய்வுக்கு உட்படுதுவதற்கான அடிப்படை இருப்பதைக் கண்டறிந்தோம். நாங்கள் அறிவித்த அனைத்து முடிவுகளும் சிறிய அளவிலான பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒற்றை ஆய்வுகளின் அடிப்படையில் என்றாலும் 833 பெண்கள் பங்கேற்றுள்ள 11 சமவாய்ப்பு ஆய்வுகள் திறனாய்வுக்கு சேர்த்து கொள்ளப்பட்டது. ஏறக்குறைய எடுத்துக்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளிலிருந்து திறனாய்வின் ஒட்டுமொத்த முடிவுகளை அறிய முடியவில்லை. ஏனெனில் இதில் குறைபிரசவத்தைத் தடுக்க செய்யப்பட்ட ஏழு ஆய்வுகளிலும், குறைப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்ட ஐந்து ஆய்வுகளிலும் வேறுபட்ட ஒப்பீடுகளில் வேறுபட்ட தளர்வு வடிவங்கள் பயன்படுத்தப்பட்டு பற்றாக்குறையான தகவல்களே கிடைத்தன. இந்ததிறனாய்வுகளிலிருந்து சுருக்கமாகஒரு செல்லத்தக்க முடிவினைக் காண்பது இயலாது. குறைப்பிரசவத்தில் இல்லாத பெண்களுக்கு மனத் தளர்வு சிகிச்சை (தனித்த அல்லது வழக்கமான சிகிச்சை இணைந்து) வழக்கமான பிரசவமுற்கவனம் பெற்றவர்களோடு ஒப்பிடுகையில் தாய்க்குரிய மன அழுத்தத்தை குறைத்து, பிறப்பு எடையை அதிகரிக்க செய்தது. மற்றும் குறைந்த அறுவை சிகிச்சை பிறப்புகளே ஏற்பட்டது. குறைப்பிரசவத்தில் இருக்கும் பெண்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகள், நன்மைகள் அளித்ததா அல்லது பாதிப்பை ஏற்படுத்தியதா என அறிய சான்றுகள் எதுவும் இல்லை. குறைப்பிரசவத்தை தடுக்கவும்சிகிச்சை அளிக்கவும் தளர்வு சிகிச்சைகளின்விளைவுகளை முழுமையாக மதிப்பிட மிக தீவிரமான முறைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: செந்தில்குமார், கீதா மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information