கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாததிற்கு Edaravone

பெரும்பாலான பக்கவாதம் மூளையில் உள்ள ஏதேனும் ஒரு தமனியில் குருதி உறைவதால் ஏற்படுகிறது. மூளைக்குப் போதுமான இரத்த ஓட்டம் இல்லாமையால், விரைவில் மூளைக்கு நிரந்தரமான சேதம் ஏற்படலாம். கை அல்லது கால் வலுவிழத்தல் அல்லது பார்வை அல்லது மொழி சிரமங்கள் பக்கவாதத்தால் உண்டாகலாம். சில பரிசோதனை மற்றும் மனித ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் எடரவோன் (edaravone) எனும் ஒரு நரம்பியல் பாதுகாப்பு சாதனத்தால் , கடுமையான ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை இருக்கலாம் என்று கருத்துரைக்கின்றன. பக்கவாத சிகிச்சைக்காக சீனாவில் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடரவானின் விளைவுகளை நம்பகமாக மதிப்பிட்டு பெறும் பொருட்டு 496 நபர்கள் பங்கு கொண்ட 3 ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம் . பரிசோதனைகளின் தரம் மிதமாக இருந்தது. கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு எடரவோன் (edaravone) ஒரு திறன் வாய்ந்த சிகிச்சை என்று தோன்றுகிறது. எனினும் இந்த முடிவை உறுதி செய்ய, மேலும் உயர் தரம் வாய்ந்த பெரிய மாதிரி சோதனைகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information