தாய்மார் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுத்த கர்ப்ப காலத்தில் (தடுக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை தவிர வேறு) கூடுதல் கால்சியம் உட்கொளுத்தல்லின் திறன்.

கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து கரு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும் என்பது அறிந்ததொன்று. எங்கள் திறனாய்வுவில் , கர்ப்ப காலத்தில் கூடுதல் கால்சியம் மாத்திரைகள் வழக்கமாக உட்கொள்வதால் கால்சியத்தை பெற்ற பெண்கள் குழுவில் குழந்தை பிறந்த எடை சற்று உயர்ந்தது தவிர குறைபிரசவம் அல்லது மற்ற விளைவுகளை மாற்றவில்லை. இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் குறைந்த பாரபட்சம் ஆபத்து உள்ளவை என்று மதிப்பீடு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட விளைவுபயனுக்கு மிதமான தரம் என்று தர நிலை செய்யப்பட்டது. கால்சியம் உட்கொள்வது எந்தவிதமான வெளிப்படையான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் திறனாய்வில் 25 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அதில் 18.587 பெண்கள் சம்பந்தப்பட்ட 23 ஆய்வுகள் மட்டும் விளைவு தரவுக்கு பங்களித்துள்ளது. பெரும்பாலான சான்றுகள் எண்ணிக்கையில் குறைவான பங்ககேற் பாளர்களை கொண்ட ஆய்வுகளை அடிப்படையாக கொண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information