காச நோய் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊட்டசத்துக்கள்

காக்றேன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது காச நோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு கொடுக்கப்படும் கூடுதல் ஊட்டச்சத்தின் விளைவுகளை குறித்து ஆராய்ந்தனர். பிப்ரவரி 4 2016 வரைக்கும் உள்ள தொடர்புடைய ஆய்வுகளை தேடியதில் 8283 பங்கேற்பாளர்கள் கொண்ட 35 தொடர்புள்ள ஆய்வுகள் மட்டும் சேர்க்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் சுருக்கம் பின்வருமாறு.

காசநோய் தொற்று என்றால் என்ன மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துகள் எவ்வாறு செயல்படும்?

காசநோய் என்பது நுரையீரலை பாதிக்ககூடிய பக்டீரியா கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோயாகும். பலர் இந்த தொற்றை பெற்றிருந்தும் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அடக்குவதால் அநேகருக்கு நோயின் அறிகுறிகள் எப்போதும் வெளிப்படுவதில்லை. நோயின் தொற்றை உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் அடக்க முடியாமல் போகும்போது காசநோய் ஏற்படுகிறது, வழக்கமான அறிகுறிகள் இரும்பல், நெஞ்சுவலி, இரவின் வியர்வை, எடை குறைத்தல், மற்றும் ஒரு சில நேரங்களில் இரும்பும்போது இரத்தத்தை கக்குவது ஆகியவையே. இதற்கு சிகிச்சையாக கூட்டாக ஒரு சில ஆண்டிபயாடிக் மருந்துகளை குறைந்தது 6 மாத காலங்கள் கண்டிப்பாக எடுத்துகொல்வதாகும்,

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் போதிய ஊட்டச் சத்து இல்லாதவர்கள், மற்றும் போதிய ஊட்டச் சத்து இல்லாதவர்களே காசநோய் தொற்றை பெற அதிக வாய்புள்ளவர்களாய் காணப்படுகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமான நிலையில் உள்ளது. ஊட்டசத்தின் உதவியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெலப்படுத்தும்போது நோயாளிகள் தங்கள் சுகவீனதில்லிருந்து மீளுவர்கள், மற்றும் உடல் எடை, தசை பெலனில் முன்னேற்றமும் பெறுவதின் நிமித்தம் தங்கள் இயல்பான வாழ்கைக்கு திரும்புவார்கள். தினமும் எடுக்கும் நல்ல ஊட்டசத்தில் மேக்ரோ சத்துக்கள் ( மாவு சத்து, புரத சத்து, மற்றும் கொழுப்பு சத்து) மற்றும் மைக்ரோ சத்துக்கள் (தேவையான வைடமின்ஸ் மற்றும் தாது சத்து) இருத்தல் அவசியம்.

ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும்போது ஊட்டசத்து கொடுப்பதின் மூலம் ஏற்படும் விளைவு என்ன.

இலவசமாக உணவை சூடான மத்திய உணவாகவோ, அல்லது ரேஷன் மூலமாக உணவுகளை பார்சல் செய்து காசநோயளிகளுக்கு தருவதால் மரண எண்ணிக்கையில் குறைச்சலோ அல்லது நோயில் முன்னேற்றமோ ஏற்படுகிறது என்று தற்போதைய நிலையில் அறிய முடியவில்லை ( மிக குறைந்த தரம்கொண்ட ஆதாரம் ). இருப்பினும், ஒரு சில ஆய்வு இடங்களில் நோயாளியின் உடல் எடையில் முன்னேற்றத்தை காணமுடிகிறது ( மிதமான தரமுள்ள ஆதாரம் ), மற்றும் வாழ்கை தரத்தையும் ஒருவேளை முன்னேற்றலாம் ( குறைந்த தர ஆதாரம் ).

வழக்கமாக கொடுக்கப்படும் பலவிதமான மைக்ரோ ஊட்டசத்துகளால் எச் ஐ வி பாதிப்பு இல்லாத காசநோய் நோயாளிகளிடமோ அல்லது எச் ஐ வி தோற்று கொண்ட நோயாளிகள் ரெட்ரோ வைரல் எதிர் விணை சிகிச்சையை எடுத்துகொள்ளதவர்களிடமோ (குறைந்த தர ஆதாரம்), மரண எண்ணிகையில் சிறிய விளைவு அல்லது விளைவு இல்லாத தன்மையே உள்ளது (மிதமான தரமுள்ள ஆதாரம்). மைக்ரோ ஊட்டசத்து கொடுப்பதின் மூலம் காசநோய் சிகிச்சையில் எந்த விளைவுகளையும் காண முடியும் என்று தற்போதைய நிலையில் அறிய இயலவில்லை (மிக குறைந்த தர ஆதாரம்), ஆனால் எடை கூடுவதிலும் எந்த விதமான மாற்றத்தை ஒருவேளை காணமுடியாதுகுறைந்த தர ஆதாரம்). வழக்கை தரத்தின் விளைவைக்குறித்து எந்த ஒரு ஆய்வும் மதிப்பீடு செய்யவில்லை.

கூடுதல் ஊட்டசத்து அளிக்காத நிலையிலும் காசநோய்க்காண சிகிச்சை ஆரம்பிக்கும்போதே வைட்டமின் A வின் பிளாஸ்மாவின் நிலை உயர்வடைய காண்பிக்கிறது. மாறாக, ஊட்டசத்து ஒருவேளை ஜின்க்(zinc), வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் செலேனியும்(selenium) ஆகியவற்றின் பிளாஸ்மா நிலைகளை உயர்த்தலாம், ஆனால் இவைகள் எந்த விதமான முக்கிய மருத்துவ நன்மைகள் அளிக்காது. பல ஆய்வுகளில் வைட்டமின் D ஊட்டசத்து பலவிதமான மதிப்பிடுகளில் கொடுக்கப்பட்டதின் மூலம் புள்ளியியல் விவரப்படி குறிப்பிடத்தக்க சளியில் மாற்றம் ஏற்பட்டதை விவரிக்க முடியவில்லை.

ஆசிரியர்களுடைய முடிவுரைகள்

சில சூழ்நிலைகளில், காசநோயிளிருந்து குணமடையும் நேரத்தில், உணவு அல்லது ஆற்றல் தரக்கூடிய ஊட்டசத்துக்கள் ஒருவேளை உடலின் எடையை கூட்டலாம், ஆனால் காசநோயின் சிகிச்சையின் விளைவுகளை மாற்றும் என்பதை உறுதிச்செய்ய எந்த ஆதாரமும் இல்லை. பரிந்துரைக்கப்பபட்ட ஊட்டசத்தை தினசரி அளவுக்கு மேலாக கொடுப்பதால் மருத்துவ நன்மைகள் அடையலாம் என்று சொல்ல தற்போது நம்பகமான ஆதாரம் ஏதுமில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி செல்லுவப்பா, ஜாபெஸ் பால்]

Tools
Information