Skip to main content

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வைட்டமின் ஏ உபரிச்சத்து

பிரச்சினை என்ன?

தாய்ப் பாலூட்டல் பச்சிளம் குழந்தைகளது வாழ்வின் ஆரம்ப மாதங்களுக்கான தேவைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், தாயே ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் இருந்தால் பச்சிளங்குழந்தை தேவையான அனைத்து ஊட்டசத்தையும் பெற முடியாமல் போகலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பச்சிளங்குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் ஏ அவசியம். ஆகையால் தாய் தன் உணவில் சரியான அளவு வைட்டமின் ஏ உட்கொள்ளாவிட்டால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் போதியளவு சேராது.

இது ஏன் முக்கியமானது?

வைட்டமின் ஏ குறைபாடு ஒரு பொது சுகாதார பிரச்சனையாக உள்ள இடங்களில் பாலூட்டும் தாய் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ தாயின் தேவைக்கு குறைவாக இருக்கலாம் . அல்லது தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு தாய்பாலில் விட்டமின் A அளவு குறைவினால் தேவையான அளவு ஊட்ட சத்து கிடைக்காமல் போகலாம். வைட்டமின் ஏ குறைபாடுபரவலாக உள்ள நாடுகளில் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

நாங்கள் கண்ட ஆதாரம் என்ன?

14 ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். சான்றுகள் பொதுவாக "குறைந்த" அல்லது "மிகவும் குறைவான " தரம் கொண்டவையாக இருந்தன. அதிக அளவு வைட்டமின் ஏ வுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு அல்லது குழந்தை பெற்ற ஆறு வாரத்திற்குள் தாய்மார்களுக்கு வைட்டமின் ஏ அளிப்பது அல்லது குடுக்காமல் இருப்பது போன்ற முறைகளை இந்த ஆராய்ச்சிகள் ஆய்வு செய்தன. தாய் மற்றும் சேயின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், பக்க விளைவுகள் மற்றும் தாய்பாலில் வைட்டமின் ஏ யின் துணை விளைபொருளான ரெடிநோல் அளவு ஆகியவற்றை எங்களது திறனாய்வு தேடியது. எத்தனை தாய்மார்கள் அல்லது குழந்தைகள் மரணம் அடைந்தார்கள் அல்லது உடல் நிலை சரியில்லாமல் போனார்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தாய்மார்களும் மற்றும் அவர்களுடைய குழந்தைகளும் எந்த பக்க விளைவுகளையும் அநுபவிக்கவில்லை. தாய்ப்பாலில் ரெட்டினால்லின் அளவு அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரம் உள்ளது.

இதற்கு என்ன அர்த்தம்?

தாய்மார்களுக்கு கூடுதலாக வைட்டமின் ஏ அளிப்பது தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து அளவை சற்று மேம்படுத்தினாலும், அநேகமாக தாய் மற்றும் குழந்தைகள் இறப்பினில் சதவித்தை அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தாய் அல்லது குழந்தைக்கு பக்க விளைவுகள் உண்டுபண்ணுவதில் எந்த மிக சிறிய மாற்றமும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Citation
Oliveira JM, Allert R, East CE. Vitamin A supplementation for postpartum women. Cochrane Database of Systematic Reviews 2016, Issue 3. Art. No.: CD005944. DOI: 10.1002/14651858.CD005944.pub3.