நீரிழிவு சிறுநீரக நோயின் (டையாபாடிக் கிட்னி டிசிஸ், டிகேடி) தொடக்கத்தை தடுப்பதற்கு ஹெப்பாரின் மற்றும் அதன் தொடர்புடைய பொருள்களின் விளைவுகளை பற்றி தற்போது எந்த ஆதாரமும் இல்லை.

ஹெப்பாரின் மற்றும் க்லைக்கோ அமினோக்லைகான்ஸ், காண்ட்ரோடின், லோ மாலிக்யூலர்-வெய்ட் ஹெப்பாரின் (எல்எம்டபிள்யுஎச்), ஹெப்பரினாய்ட்ஸ், ஹெப்பரிடின் சல்பேட், ஹயலூரனிக் ஆசிட், மற்றும் கேரடேன் சல்பேட் ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்புடைய பொருள்கள், நீரிழிவு சிறுநீரக நோயின் (டையாபாடிக் கிட்னி டிசிஸ், டிகேடி) முன்னேறுதலை தாமதிப்பதில் ஓரளவு கொஞ்சம் நேர்மறையான விளைவுகளைக் எடுத்துக் காட்டின. டிகேடி-யின் தொடக்கத்தை தடுப்பதற்கு ஹெப்பாரின் மற்றும் தொடர்புடைய பொருள்களின் விளைவை மதிப்பிட்ட சீரற்ற ஆய்வுகளை இந்த திறனாய்வு பார்த்தது. எந்த ஆய்வும் கிடைக்கப் பெறவில்லை. இந்த பிரச்னையை வழிமொழியும் சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட மற்றும் உயர்தர சீரற்ற ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information