தம்ப முள்ளந்தண்டழல் (அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸ்) சிகிச்சைக்கு– TNF- எதிர்-அல்பா மருந்துகள்

தம்ப முள்ளந்தண்டழல் வியாதிக்கு எதிர்- அல்பா மருந்துகளின் (adalimumab (Humira®), etanercept (Enbrel®), golimumab (Simponi®), மற்றும் infliximab (Remicade®) செயல்பாடு பற்றிய ஜூன் 2014 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் 3308 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 21 ஆய்வுகளைக் கண்டறிந்தனர். பெரும்பாலான ஆய்வுகள் மருந்து நிறுவனங்கள் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டவை.

தம்ப முள்ளந்தண்டழல் (அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸ்) மற்றும் எதிர் – டி.என்.எப்.- ஆல்பா (anti-TNF-alpha) மருந்துகள் என்றால் என்ன?

தம்ப முள்ளந்தண்டழல் என்பது வழக்கமாக முதுகெலும்பின் மூட்டு மற்றும் தசைநார்களைப் பாதிக்கும் ஒரு வகையான மூட்டுவாதம் ஆகும். இருப்பினும், மற்ற மூட்டுகளையும் இது பாதிக்ககூடியது. முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி, விறைப்பு மற்றும் அசைவின்மையை உண்டாக்ககூடியது. இந்த வியாதி நீண்ட காலம் நீடிக்கக்கூடிய, முற்றிலும் தீவிரம் பெறக்கூடிய, வந்துபோகும் தன்மை உடையதாகும்.

டி.என்.எப்.- ஆல்பா (anti-TNF-alpha) மருந்துகள் அழற்சியை விளைவிக்ககூடிய ‘கழலை நசிவு காரணி’ (tumour necrosis factor) எனப்படும் புரதத்தை செயல் இலக்காக கொண்டு வேலை செய்பவை. இந்த மருந்துகள் ஊறுபாட்டினை தடுக்கும் நோக்கத்துடன், நோய் எதிர்ப்புத்திறனை அடக்கி, கணுக்களின் அழற்சியை குறைக்கிறது. நோய் எதிர்ப்புத்திறனை அடக்குவதால் நோய் தொற்றுதலை தடுக்க அதிகமாக போராட வேண்டி இருந்தாலும், மிகவும் உந்தப்பட்ட நோய் எதிர்ப்பு (overactive immune system) முறையை நிலைப்படுத்த உதவுகிறது.

24 வாரங்கள் எதிர்-TNF- alpha மருந்துகளை உபயோகப்படுத்துவதால், அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெறக்கூடியவை என்று திறனாய்வு கூறுபவை:

- வலியை குறைக்கிறது; அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிசால் பாதிக்கப்பட்டவர்களின் மற்ற அறிகுறிகளையும் சார்பலனையும் மேம்படுத்துகிறது.
- அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸின் அறிகுறிகள் பகுதியளவு தணிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது
- முதுகுத்தண்டின் அழற்சியை தோராயமாக குறைக்கலாம் என்று காந்த ஒலி வரைவு (MRI) அளவை தெரிவிக்கின்றது.
- பின்விளைவுகள் காரணமாக ஆய்வுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறுகிறார்கள் என்று தோராயமாக கூறலாம்.

பின்விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் நம்மிடையே கிடையாது. கடுமையான எதிர் விளைவுகளை அதிகரிக்க செய்யும் எந்த ஆதாரமும் இந்த குறுகிய கால ஆய்வுகளில் காணப்படவில்லை. தீவிரமான தொற்று நோய் (காச நோய்) அல்லது மேல் மூச்சுப்பாதைத் தொற்றுநோய் போன்ற பக்க விளைவுகள் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. அரிதான பக்க விளைவுகளில் சில வகையான புற்றுநோயும் உள்ளடங்கும்.


24 வாரங்கள் TNF எதிர்ப்பு மருந்துகள் எடுத்த தம்ப முள்ளந்தண்டழல் (அன்கிலோசிங் ஸ்போன்டிலைடிஸால்) பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய சிறந்த கணிப்பு:

ASAS40 ( முற்பகல் விறைப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த நன்மையை அளவிடும் போது வலி, சார்பலன் மற்றும் அழற்சியை மேம்படுத்துததில் 40% முன்னேற்றம்).

ஆறுதல் சிகிச்சையுடன் ஒப்பீடுசெய்கையில், முன்னேற்றம் காணப்பட்ட நூற்றில் 13 பேர் எடுத்தவை:

- adalimumab: நூற்றில் 46 பேர் முன்னேற்றத்தை அனுபவித்தனர். (33% முன்னேற்றம்);
- etanercept: நூற்றில் 43 பேர் முன்னேற்றத்தை அனுபவித்தனர். (30% முன்னேற்றம்);
- golimumab: நூற்றில் 38 பேர் முன்னேற்றத்தை அனுபவித்தனர். (25% முன்னேற்றம்);
- infliximab: நூற்றில் 53 பேர் முன்னேற்றத்தை அனுபவித்தனர். (40% முன்னேற்றம்).

பகுதியளவு தணிவு (முற்பகல் விறைப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த நன்மையை அளவிடும் போது வலி, சார்பலன் மற்றும் அழற்சி பகுப்பில் 0 to 10 என்ற அளவுகோலில் 2க்கு கீழே மதிப்பு பெற்றிருக்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது).


ஆறுதல் சிகிச்சையுடன் ஒப்பீடுசெய்கையில், முன்னேற்றம் காணப்பட்ட நூற்றில் 3 பேர் எடுத்தவை:

- adalimumab: நூற்றில் 19 பேர் பகுதியளவு தணிவை அனுபவித்தனர். (16 % முன்னேற்றம்);
- etanercept: நூற்றில் 13 பேர் பகுதியளவு தணிவை அனுபவித்தனர். (10% முன்னேற்றம்);
- golimumab: நூற்றில் 16 பேர் பகுதியளவு தணிவை அனுபவித்தனர். (13% முன்னேற்றம்);
- infliximab: நூற்றில் 47 பேர் பகுதியளவு தணிவை அனுபவித்தனர். (44% முன்னேற்றம்).

உடலுறுப்பின் சார்பலன் (குறைந்த அளவு எனில் மேம்பட்ட செயல்பாடு; 0 to 10 அளவுகோல் )

ஆறுதல் சிகிச்சையுடன் கீழ்க்கண்ட மருந்தை எடுத்தவர்களை ஒப்பீடுசெய்கையில் (5 மதிப்பெண்கள்):

- adalimumab: தங்கள் செயல்பாட்டை 3.4 என்று மதிப்பிட்டனர். (16 % முன்னேற்றம்);
- etanercept: தங்கள் செயல்பாட்டை 3.9 என்று மதிப்பிட்டனர்.(11% முன்னேற்றம்);
- golimumab: தங்கள் செயல்பாட்டை 3.5 என்று மதிப்பிட்டனர் (15% முன்னேற்றம்)
- infliximab: தங்கள் செயல்பாட்டை 2.9 என்று மதிப்பிட்டனர் (21% முன்னேற்றம்).

முதுகுத்தண்டின் அழற்சி- காந்த ஒலி வரைவு (MRI) வழியாக அளவை செய்யப்பட்ட போது:

ஆறுதல் சிகிச்சையுடன் மருந்தை எடுத்தவர்களை ஒப்பீடுசெய்கையில், முதுகுத்தண்டின் அழற்சியில் சிறிய அளவிலான மேம்பாடு காணப்படுகிறது:

- adalimumab: (6 % முன்னேற்றம்);
-golimumab: (2.5% முன்னேற்றம்);
- infliximab: (3% முன்னேற்றம்).

மூட்டுகள்- x- புதிர்க்கதிர்கள் வழியாக அளவை செய்யப்பட்ட போது:

மூட்டுகளில் x- புதிர்க்கதிர்களை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்ததில், ஒரே ஒரு ஆய்வு மட்டும் இரு குழுக்களிலும் ஒரே மாதிரியான மாற்றங்கள் காணப்படுகிறது என்று தெரிவிக்கின்றது (விரிவான தகவல்கள் தரப்படவில்லை)

பக்க விளைவுகள்

எல்லா TNF- எதிர்-alpha மருந்துகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது, பக்க விளைவுகளின் காரணமாக ஆய்வுகளில் இருந்து ஆயிரத்தில் பதினாறு பேர் வெளியேறியதாக தெரிகிறது. ஆறுதல் சிகிச்சையில் இந்த வெளியேற்றம் ஆயிரத்திற்கு ஏழு ஆகும். இது 1% சார்பிலா மிகுதியாகும்.

TNF- எதிர்-alpha மற்றும் போலி மாத்திரையை ஒப்பிட்டு பார்க்கும் போது, கடுமையான பக்கவிளைவுகள் மிக குறைவாகவோ அல்லது எந்தவொரு வேறுபாடும் இல்லாமலோ இருக்க கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கோ. ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information