மருத்துவமனைகளில் தொற்றுகளை குறைப்பதற்கு ஆரோக்கிய பராமரிப்பு ஊழியரின் கை சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மருத்துவமனை, செவிலிய இல்லங்கள் மற்றும் நீண்ட-கால பராமரிப்பு இல்லங்களில் உள்ள நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பை விட தொற்றுகளுக்கு அதிக அபாயத்தைக் கொண்டிருப்பர். நேரடித் தொடர்பினால், குறிப்பாக ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களின் கைகள் மூலம் பெரும்பாலான ஆரோக்கியம்-தொடர்பான தொற்றுகள் பரவுவதாக உள்ளன. பாரம்பரியமாக, நோயாளிகளை தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவுவதை தொற்றுகளைக் குறைப்பதற்கு மிக முக்கியமான வழியாக கருதப்படுகிறது. பாரம்பரியமான சோப்பைக் கொண்டு கை கழுவுவதோடு சேர்த்து அல்லது அதற்கு மாற்றாக ஆல்கஹால்-சார்ந்த காய் துடைப்பான்கள் இப்போது அதிகரித்த வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. எனினும், கை சுகாதாரத்தை கடைபிடித்தல் மோசமாகவே உள்ளது.

கை சுகாதாரத்தை கடைப்பிடித்தலை மேம்படுத்துவதற்கான திறன் வாய்ந்த யுக்திகள் ஏதேனும் உள்ளனவா, அத்தகைய யுக்திகள் குறைந்த-கால அல்லது நீண்ட-காலத்திற்கு திறன் மிக்கவையாக உள்ளனவா மற்றும் அதிகமான கடைப்பிடித்தல் ஆரோக்கியம்-தொடர்பான தொற்றுகளைக் குறைக்குமா என்பதை இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு காண விழைந்தது.

இந்த திறனாய்வில் உள்ள நான்கு ஆய்வுகளில், இரண்டு 2007=ஆம் ஆண்டு திறனாய்வு பதிப்பிலிருந்து வந்ததாகும், மற்றும் கை சுகாதாரத்தை கடைபிடித்தலை மேம்படுத்துவதற்கு பிரசாரங்களை மதிப்பிட்டு இரண்டு ஆய்வுகள் இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பிலிருந்து வந்ததாகும். இரண்டு ஆய்வுகளில், பின்-தொடர்தல் காலம் 12 மாதங்களுக்கு மேலாக இருந்தது.ஆனால், எந்த ஆய்வுகளும் உயர்ந்த தரத்தை கொண்டவையாக இருக்கவில்லை. நான்கு ஆய்வுகளிடையே கை சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வெற்றிகள் நிலையற்றதாய் இருந்தன.

கை சுகாதாரத்தை கடைபிடித்தலை எந்த யுக்திகள் மேம்படுத்தும் என்பதை உறுதியாய் அறிந்து கொள்ள இன்னும் போதுமான ஆதாரம் இல்லை. தலையீடுகள் விளக்கக்கல்வி/ பயிற்சியோடு அளிக்கப்படும் ஆல்கஹால்-தொடர்பான கை துடைப்பான்கள் பற்றாது. பல்வேறு யுக்திகளை பயன்படுத்தும் போது, திட்டமிடலில் ஊழியர்களை உள்ளடக்கும் நடவடிக்கைகள் அல்லது சமூக விற்பனை யுக்திகள் போன்றவை உதவக் கூடும். அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்