கடுமையான பக்கவாதத்திற்கு டாங்சின்யோ (Tongxinluo) மாத்திரைகள்

கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்குச் சிகிச்சைக்காக சீனமரபுவழி மருத்துவம் பெரும்பான்மை நேரங்களில் உபோகிக்கப்படுகிறது. கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாத சிகிச்சைக்கு டாங்சின்யோ (Tongxinluo) மாத்திரைகளின் சாத்தியமான பயன் மற்றும் பாதுகாப்பு பற்றி அறிய ஆசிரியர்கள் இந்த திட்டமிட்ட திறனாய்வினை மேற்கொண்டனர். இதோடு தொடர்புடைய 232 பங்கேற்பாளர்கள் கொண்ட இரண்டு ஆராய்ச்சிகள் கண்டறியப்பட்டது. ஆனால் அவை இந்த சிகிச்சை விளைவுகளைப் பற்றி நம்பத்தகுந்த ஆதாரங்களை வழங்கவில்லை. பக்கவாத நோயாளிகளுக்கு டாங்சின்யோ (Tongxinluo) மாத்திரைகளின் திறனை அறிய பெரிய அளவிலான தரம் வாய்ந்த சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information