வயது வந்தவர்களில் ஹாம்ஸ்ட்ரிங்ஸ் காயத்திற்கு பின்வரும் புனர்வாழ்வு

விளையாட்டு மருத்துவத்தில் ஹாம்ஸ்ட்ரிங்ஸ் காயங்கள் பொதுவாக சந்திக்கப்படுவதாகும், மற்றும் இதன் மருத்துவ மேலாண்மை பரந்த வேறுபாட்டை கொண்டுள்ளவையாக உள்ளன . இந்த பிரச்னைக்கு, புனர்வாழ்வு திட்டங்களை ஒப்பிட்ட மொத்தம் 104 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்த இரண்டே சீரற்ற சோதனைகள் காணப்பட்டன. இதென்னவென்றால்,முன்மொழியப்பட்ட அநேக செய்முறை நுட்பங்கள் ஒழுங்கான கூர்ந்தாய்விற்கு உட்படுத்தப்படவில்லை. அதிகரிக்கப்பட்ட அனுதின நிகழ்வுகளைக் கொண்ட ஹாம்ஸ்ட்ரிங்ஸ் தசை நீட்சி பயிற்சிகள் மீட்சியின் வீதத்தை அதிகரிக்கக் கூடும் என்று ஒரு ஆய்விலுள்ள வரம்பிற்குப்பட்ட ஆதாரம் பரிந்துரைக்கிறது . அசைவு பிறழ்ச்சியை சரி செய்யும் பயிற்சிகள் முழு நடவடிக்கைக்கு திரும்பும் நேரத்தையும் மற்றும் மறுபடியும் காயம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க கூடும் என்று கலவையான திறன்களைக் கொண்ட தடகள வீரர்கள் இருந்த மற்றொரு சிறிய ஆய்விலிருந்து தொடக்க நிலை ஆதாரம் உள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்க, மற்றும் தற்போதைய மருத்துவ நடைமுறை மற்றும் இந்த காயங்களுக்கு பரந்தளவில் வெளியாகியிருக்கும் புனர்வாழ்வு செயல்முறை நடப்பொழுங்குகளுக்கு விவரமளிக்க மேற்படியான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information