குழந்தைகளுக்கு தட்டம்மை (measles) விளையாட்டம்மை (புட்டாலம்மை) (mumps) ருபெல்லா நோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு மருந்தின் பயன்.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்தங்கிய குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை (measles) விளையாட்டம்மை (புட்டாலம்மை) (mumps) ருபெல்லா ஆகிய இந்த மூன்றும் மிக ஆபத்தான தொற்று நோய்கள், இவை கடுமையான நோய் துன்பம் (morbidity),செயல் இழத்தல் (disability) மற்றும் இறப்பினை எற்படுத்துகின்றன.

3104 நோயாளிகள் பங்கேற்ற மூன்று தொடர் ஆய்வுகள் அடிப்படையில் கீழ்காணும் முடிவுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. முன்பள்ளி/நர்சரி மாணவர்களுக்கு (pre-school) ஒருமுறை கொடுக்கப்படும் MMR தடுப்பு மருந்து மூலம் தட்டம்மை(measles) வராமல் தடுப்பது 95% ஆக உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் பிரிவில் ஒருமுறை கொடுக்கப்படும் MMR தடுப்பு மருந்தால் 98% தட்டம்மை நோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வுகூட சான்றுகள் தெரிவிக்கின்றன. ஒன்று அல்லது இரண்டு முறை கொடுக்கப்படும் MMR தடுப்பு மருந்தினால் 92% மற்றும் 95% பயனுள்ளதாக நோய் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

Jeryl Lynn strains உடன் தயாரிக்கப்படும் MMR தடுப்பு மருந்து குறைந்தது ஒருமுறை கொடுக்கபட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் பயனுள்ள நோய் எதிர்ப்பை தருகின்றது (தடுப்பூசியின் திறன் = 69% to 81%, ஒரு தொகுப்பு (cohort) மற்றும் ஒரு case control ஆய்வு, 1656 நோயாளிகள் பங்கேற்றனர்) அதுபோல் Urabe strain பயன்படுத்தி ஆய்வு செய்தபோது (தடுப்பூசியின் திறன் = 70% to 75%, ஒரு தொகுப்பு (cohort) மற்றும் ஒரு case-control ஆய்வு, 1964 நோயாளிகள் பங்கேற்றனர்). குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஆய்வுக்கூடத்தில் உறுதி செய்யப்பட்ட புட்டாலம்மைக்கு எதிராக மதிப்பிடு செய்ததில், இவர்களுக்கிடையே ஒரு தடுப்பூசிக்கு 64% to 66%ம், இரண்டு தடுப்பூசி Jeryl Lynn MMRக்கு 83% to 88% (2 ஆய்வறிக்கைகள், 1664 நோயாளிகள்) மற்றும் 87% Urabe strain (ஒரு தொகுப்பு ஆய்வறிக்கை, 48 நோயாளிகள்) உடையதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. Urabe strain MMR உடன் தடுப்பூசியானது இரண்டாம் முறையாக தோன்றும் புட்டாலம்மைஎதிராக பாதுகாப்பு அளிக்கின்றது ( தடுபூசியின் செயல்திறன் = 73%, ஒரு தொகுப்பு ஆய்வறிக்கை, 147 நோயாளிகள் பங்கேற்றனர்)

மருத்துவம் மற்றும் ஆய்வுகூடத்தில் உறுதிசெய்யப்பட்ட ருபெல்லா நோய்க்கு எதிராக MMR தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பீடு செய்யும் எந்த ஒரு ஆய்வறிக்கையை எங்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை.

Urabe or Leningrad – Zagreb strain MMR தடுப்பூசி கொடுக்கப்பட்ட 1,500,000 குழந்தைகள் பங்கேற்ற மிகப்பெரிய தனி நபர் ஆய்வறிக்கையின் முடிவுகள், இந்த தடுப்பூசி aseptic மூளைக்காய்ச்சலுடன் சம்பந்தம் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றன. ஆனால் Moraten, Jery Lynn, Wistar RA, RIT, 4385 strain அடங்கிய தடுப்பூசி செலுத்துவதின் நிமித்தம், 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும் இளம் வயது வலிப்புக்கு (Febrile convulsion) சம்மந்தம் உள்ளதாக தெரிகிறது ( ஒரு நபர் கால தொகுப்பு ஆய்வு, 537,171 நோயாளிகள் பங்கேற்றனர்; 2 சுய கட்டுபாட்டு தனி நபர் ஆய்வுகள், 1001 நோயாளிகள் பங்கேற்றனர்). மேலும் MMR தடுப்பூசி idiopathic thrombocytopaenic purpura உடன் ஒருவேளை சம்பந்தம் இருக்கலாம் (2 case-control, 2450 நோயாளிகள் பங்கேற்றனர், ஒரு self controlled தனி நபர்கள் ஆய்வறிக்கை, 63 நோயாளிகள் பங்கேற்றனர்).

MMR தொற்றுநோய் தடுப்புக்கும் ஆட்டிசம் (autism) ஆஸ்துமா, இரத்தப்புற்று நோய் (Leukemia), வைக்கோல் காய்ச்சல் (hay fever), சர்க்கரை நோய் (Type I diabetics), நடையில் தொந்தரவு, Crohn’s நோய், நரம்புறை சிதைவு நோய்கள் அல்லது பாக்டீரியா தோற்று அல்லது வைரஸ் தொற்று நோய்களுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளை அறிய இயலவில்லை இந்த ஆய்வில் செர்த்துகொள்ளபட்ட பல ஆய்வுகளின் முறையின் தரம் பொதுவான முடிவுகளை பொதுமைப்படுத்தவதில் கடினமாக அமைத்துவிட்டது.

இந்த ஆய்வின் வடிவமைப்பின் அருஞ்சொற்பொருள்கள் முழுவுரைத் வடிவில் கிடைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி செல்லுவப்பா, வசந்த், ஜாபெஸ் பால்]