கழுத்து வலிக்கான மின் சிகிச்சை

பின்புலம்

கழுத்து வலி அதிக சிகிச்சை செலவினை ஏற்படுத்தும் பொதுவான இயலாமை ஆகும். மின்சிகிச்சை எனப்படும் குடைசொல் மின் ஓட்டத் தை உபயோகித்து வலியை குறைத்தல், தசை இறுக்கம் மற்றும் அதன் செயல்பாட்டை முன்னேற்றுதல் ஆகிய நோக்கங்களோடு செய்யப்படும் பல சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.

ஆய்வுகளின் பண்புகள்

இந்த புதுப்பிக்கப்பட்ட, திறனாய்வு 20 சிறிய ஆய்வுகளை உள்ளடக்கியது.((N = 1239) நாங்கள் தீவிரமான கழுத்து சுளுக்கு அல்லது திட்டவட்டமான காரணங்களால் அல்லாமல் உண்டாகும் கழுத்து வலி (கழுத்தில் எழும் சிதைவு மாற்றங்கள், தசை மற்றும் தசை உறைத் திசு (myofascial) வலி அல்லது தலைவலி) உடைய பெரியவர்கள் (> 18 வயது) ஆகியோர்களை சேர்த்துள்ளோம். சீர்குலைவின் கடுமையினை காண்பிக்கும் குறியீடு எதனையும் குறிப்பிட இயலவில்லை. இந்த ஆதாரம் ஆகஸ்ட் 2012 நிலவரப்படியானவை. இந்த ஆய்வுகள் வேறுபாடு உடைய மக்கள் தொகை, பல்வேறு மின்சிகிச்சையின் வகை மற்றும்வழங்கப்படும் மின்விசையின் அளவு , ஒப்பீடு சிகிச்சைகள் மற்றும் சற்றே வேறுபட்ட விளைவுகளை அளவீடு செய்ததால், இதன் முடிவுகளை ஓன்று சேர்க்க முடியவில்லை.

முக்கிய முடிவுகள்

ஒவ்வொரு விளைவிற்கும் குறைந்த அல்லது மிக குறைந்த தரம்கொண்ட சான்றுகளினாலும், பெரும்பான்மை வேளைகளில் இவை ஒரே ஒரு சோதனை முடிவினை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாலும், கழுத்து வலிக்கு மின்சிகிச்சையின் பலாபலனை பற்றி எந்தவொரு திட்டவட்டமான அறிக்கைகளையும் எங்களால் அளிக்க இயலாதுள்ளது . 

கடுமையான கழுத்து வலி நோயாளிகளுக்கு, TENS சிகிச்சையானது மின் தசை தூண்டலை விட வலியை நீக்குவதில் மேம்பட்டதாக உள்ளது. உடற்பயிற்சி மற்றும் அகச்சிவப்பு ஒளி அளவிற்கு இல்லை என்றாலும் என்றாலும் செவியுணரா ஒலி சிகிச்சை (அல்ட்ராசவுண்ட்) மற்றும் கைமுறை சிகிச்சை அளவிற்கு மேன்மையானது. அகச்சிவப்பு ஒளி, வெப்ப பொட்டலம், உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம் அல்லது கழுத்துப்பட்டை, உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரண மருந்துகள் ஆகியவற்றின் சேர்மானத்தின் போது கூடுதலான பயன் எதுவும் இல்லை. தீவிரமான கழுத்து சுளுக்குக்கு அயன்னோடோபோறேசிஸ் சிகிச்சையானது இன்டெர்பிரென்ட்டியல் (interferential) மின்னோட்டம், சிகிச்சை அளியாயின்மை அல்லது தலைவலியோடு கூடிய கழுத்து வலி நிவாரணத்திற்கு அளிக்கப்படும் பிரிஇழுவையக (traction) முறை, உடற்பயிற்சி மற்றும் உருவுதல் போன்றவைகளைவிட மேம்பட்டது இல்லை.

நாட்பட்ட கழுத்து வலிக்கு TENS சிகிச்சையானது போலி சிகிச்சை மற்றும் மின் தசை தூண்டலை விட வலியை நீக்குவதில் மேம்பட்டதாக உள்ளது. உடற்பயிற்சி மற்றும் அகச்சிவப்பு ஒளி அளவிற்கு இல்லை என்றாலும் செவியுணரா ஒலி சிகிச்சை மற்றும் கைமுறை சிகிச்சை அளவிற்கு மேன்மையானது. காந்த கழுத்தணிகள் வலி நிவாரணத்திற்கு மருந்தற்ற குளிகையைவிட திறம்பட்ட சிகிச்சை அல்ல. மின் தசை தூண்டுதல் சிகிச்சையை அணிதிரட்டல் அல்லது கையாளுதலுடன் ஒன்று சேர்க்கப்படும் போது கூடுதலான பயன் இல்லை.

தசை மற்றும் தசை உறைத் திசு (Myofascial) கழுத்து வலி நோயாளிகளுக்கு, TENS , FREMS (அதிர்வெண் பண்பேற்றம் நரம்பியல் தூண்டுதல், TENS ன் மற்றொரு வகை)மற்றும் மீள்செய்கை காந்த தூண்டுதல் சிகிச்சைகள் மருந்தற்ற குளிகையை விட வலியை குறைப்பதில் ஆற்றல் காட்டுகிறது.

சான்றுகளின் தரம்

சுமார் 70% ஆய்வுகள் மோசமாக நடத்தப்பட்டவை ஆகும். இந்த ஆய்வுகள் 16 முதல் 336 பங்கேற்பாளர்கள் வரை கொண்டு நடத்தப்பட்ட சிறிய அளவினதாகும் . ஆதாரக்கூறுகளில் சிதறு தன்மை மற்றும் துல்லியமின்மை காணப்படுவதால் சான்றுகளின் தரம் குறைந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக சீராய்வின் முடிவுகளை பொதுமையாக்க முடியாது. எனவே, கூடுதலான ஆராய்ச்சிகளால் இந்த திறனாய்வின் முடிவுகளையும், இந்த முடிவுகளின் மேல் நமக்குள்ள நம்பிக்கையையும் மாற்றும் சாத்தியம் மிகுதியாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

ஷங்கர் கணேஷ் வீ. ஷுண்முக சுந்தரம் மற்றும் சி.இ.பி. என். அர். குழு

Tools
Information