'சிவப்பு-ஒளி கேமராக்கள்', போக்குவரத்து விளக்குகள் உள்ள சந்திப்புகளில் விபத்து மோதல்களைக் குறைக்கிறது.

சாலை மோதல்கள், மரணம் மற்றும் காயத்திற்கான ஒரு மிக முக்கியமான காரணம் ஆகும். போக்குவரத்து சிக்னல்கள் கட்டுப்பாட்டில் உள்ள சந்திப்புகள் (குறுக்குச் சந்திப்புகள்), இவை ஏற்படுவதற்கு ஒரு பொதுவான இடமாக உள்ளது. சிவப்பு விளக்குகளைத் தாண்டி(ஓடி) பின்னர் தண்டிக்கப்படக் கூடிய டிரைவர்களை கண்டறிய 'சிவப்பு-ஒளி கேமராக்கள்' இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. டிரைவர்கள் எத்தனை முறை சிவப்பு விளக்கில் ஓட்டுவதை மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது போன்ற அவற்றின் திறனிற்கான ஆய்வுகளை இந்த திறனாய்வு தேடியது. மிக சிறியஅளவே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த வகையான தகவல் பதிவின் போது ஏற்படும் புள்ளியியல் பிரச்சினைகளுக்குகாக அதுவும் அனுமதிக்கப்படவில்லை. எனினும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஐந்து ஆய்வுகள், சிவப்பு-ஒளி கேமராக்களை பயன்படுதுத்தல், காயங்கள் இருந்த விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்தன என்று கண்டறிந்தன. இந்த ஆய்வுகளில், சிறந்தமுறையில் நடத்தப்பட்டதில், குறைவு கிட்டத்தட்ட 30% ஆக இருந்தது. கேமரா தளங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஒளிரும் கொள்கைகள், விளம்பர திட்டங்கள் மற்றும் அபராதங்கள் உட்பட சிவப்பு ஒளி-கேமரா திட்டங்களின் சிறந்த நடைமுறையைத் தீர்மானிக்க அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information