சிக்கல்கள் இல்லாத திடீர் இதயத் தசைதிசு இறப்பிற்கு படுக்கை ஓய்வு

திடீர் இதயத் தசைதிசு இறப்பின் (அக்யூட் மையோகார்டியல் இன்பார்க்ஷன், ஏஎம்ஐ) சிகிச்சையில், படுக்கை ஓய்வு ஒரு உள்ளார்ந்த பகுதியாகும். மருத்துவ நடைமுறையில் , இந்த சிகிச்சை தலையீடு வெவ்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு காலநேர அளவுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தற்போதைய வழிகாட்டல்கள், ஏஎம்ஐ-யை தொடர்ந்து குறைந்தபட்சம் 12 மணி நேர படுக்கை ஓய்வை பரிந்துரைக்கின்றன. எனினும், இந்த பரிந்துரைக்களுக்கான அடிப்படை தெளிவாக இல்லை. இந்த திறனாய்வு, பொதுவாக காலங் கடந்து விட்ட மற்றும் மிதமான முதல் மோசமான செயல்முறையியல் தரத்தை கொண்டிருந்த 15 சோதனைகளைக் கண்டது. நீண்டகால படுக்கை ஓய்வை போன்று, 2 முதல் 12 நாட்கள் மட்டும் பரவிய படுக்கை ஓய்வு பாதுகாப்பு மிக்கதாக தெரிகிறது. 12 முதல் 24 மணி நேரங்களுக்கு மேலாக அல்லாத தற்போதைய படுக்கை ஓய்வு பரிந்துரைகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் காணப்படவில்லை. கிடைக்கப்பெறும் ஆதாரத்திலிருந்து ஏஎம்ஐ-க்கு பின்னான படுக்கை ஓய்விற்கு உகந்ததான கால அளவு உறுதிபடுத்தப்படாமல் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information