மேம்பட்ட மற்றும் பரிகார ஓட்டுநர் விளக்கக் கல்வி, சாலை போக்குவரத்து மோதல்கள் அல்லது காயங்களை குறைக்காது என்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது.

உலகளவில், இறப்பிற்கும் மற்றும் காயத்திற்கும் சாலை போக்குவரத்து மோதல்கள் ஒரு முதன்மை காரணமாகும். போக்குவரத்து மோதல்களுக்கு ஓட்டுநரின் தவறுகள், அடிக்கடி ஒரு காரணியாக பங்களிப்பதால், ஓட்டுநர் விளக்கக் கல்வி ஓட்டுநர்களை பாதுக்காப்பாக வைக்கும் என்ற நம்பிக்கையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. உரிமம் பெற்ற ஓட்டுநர்களுக்கான ஓட்டுநர் விளக்கக் கல்வி, மோசமான ஓட்டுதல் ஆவணங்களை வைத்திருப்போருக்கு அல்லது பொதுவாக, ஓட்டுநர்களுக்கான மேம்பட்ட பாடப்படிப்பிற்கான பரிகார திட்டங்களாக இருக்கலாம். அவை தொலைத் தூர வழியாக, மற்றும் குழுக்களில் அல்லது தனிப்பட்ட பயிற்றுவிப்பாக வழங்கப்படலாம். சோதனைகளின் இந்த திறனாய்வு, சாலை போக்குவரத்து மோதல்கள் அல்லது காயங்களைக் குறைப்பதற்கு, உரிமம் பெற்ற ஓட்டுநர்களுக்கான எந்த விதமான ஓட்டுநர் விளக்கக் கல்வியும் வழி வகுக்கவில்லை என்பதற்கு உறுதியான ஆதாரத்தைக் கண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information