ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட குழந்தைகளுக்கு கூட்டு வைட்டமின் B6 -மாக்னீசியம் சிகிச்சை

முப்பது வருடங்களுக்கும் மேலாக, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட குழந்தைகளின் நடத்தையை மேம்படுத்துவதில் வைட்டமின் B6-ன் விளைவை ஆராய்ந்த ஆய்வுகள் அறிக்கையிட்டுள்ளன. இந்த ஆய்வுகளை திரட்டி மற்றும் வைட்டமின் B6-ன் திறனை மதிப்பிடுவதே இந்த திறனாய்வின் நோக்கமாகும். இந்த திறனாய்வின் சேர்க்கை விதியை மூன்று ஆய்வுகள் மட்டுமே சந்தித்தன, அவற்றில் ஒரே ஒரு ஆய்வு மட்டும் பகுப்பாய்விற்கு போதுமான தரவை அளித்தது. முடிவுகள் முழுமையற்று இருந்தன மற்றும் ஆய்வு மக்கள் அளவுகள் சிறிதாக இருந்தன. ஆதலால், ஆட்டிசம் கொண்ட நபர்களின் நடத்தையை மேம்படுத்துவதற்கு வைட்டமின் B6-ன் பயனை தற்போது ஆதரிக்க முடியாது. பெரியளவு, மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சோதனைகளைக் கொண்ட மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information