மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலுக்கு வழக்கமாக சுய பரிசோதனை அல்லது மருத்துவப் பரிசோதனை

பெண்கள் மத்தியில் புற்றுநோய் தாக்கத்தின் அளவு மற்றும் இறப்பிற்கு மார்பக புற்றுநோய் பொதுவான காரணமாக உள்ளது. மார்பக புற்றுநோயினால் இறக்கும் அபாயத்தைக் குறைக்க, ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்று நோய் பாதிப்பைக் கண்டறியும் உடல்நல ஆய்வு முறையாக மார்பக சுய பரிசோதனை அல்லது மருத்துவ மார்பக பரிசோதனை (ஒரு மருத்துவர் அல்லது ஒரு செவிலியர் (நர்ஸ்) மூலம் மார்பகங்களை பரிசோதிப்பது ) பல ஆண்டுகளாக ஊக்குவிக்கபடுகிறது. இந்த திறனாய்வு மேற்கண்ட முறைகளை மதிப்பீடு செய்த நன்கு வடிவமைக்கப்பட்ட ஆராய்ச்சிகளை தேடி அதிக மக்கள்தொகை அடிப்படையிலான இரண்டு ஆய்வுகளை கண்டறிந்தது. இந்த ஆய்வுகள் மார்பக சுய பரிசோதனையுடன் எந்த சோதனையும் மேற் கொள்ளாதவர்களுடன் ஒப்பீடு செய்த 388535 பெண்களை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்த திறனாய்வுக்கு உட்படுத்த பட்டஆராய்ச்சிகளின் தரவுகளின் ஆய்வுமூலம் மக்களுக்கு நோய் கண்டறியும் உடல்நல பரிசோதனை முறைகளில் மார்பக புற்று நோய் இறப்பு விகிதத்தை மேம்படுத்தும் விதத்திலான பயன்தரு விளைவுகள் ஒன்றும் கண்டறியப்படவில்லை. மார்பக சுய பரிசோதனைக்காக சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உடல்நல ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குழுவிலுள்ள பெண்களில் 3406 பெண்கள் மார்பக உடல்திசு ஆய்வுக்கு (biopsy) ஆளாக்கபட்டிருந்தனர். கட்டுப்பாட்டு குழுவில் உடல்திசுஆய்வுக்கு (biopsy)ஆளாக்கப்பட்டவர்களான 1856பேருடன் ஒப்பிடும் போது சற்றேறக் குறைய இரு மடங்கு ஆகலாம் என இந்த ஆய்வுகள் கண்டறிந்தன. மார்பக சுய பரிசோதனையையும் மருத்துவ மார்பக பரிசோதனையையும் இணைத்து கண்டறியப்பட்ட அதிக மக்கள் தொகை அடிப்படையிலான ஒரே ஆராய்ச்சி இடை நிறுத்தப்பட்டது. தொடர் நடவடிக்கைகளில் மிக குறைவான இணக்கமிருந்தமையே இதற்கு காரணம் மேலும் இந்த ஆய்விலிருந்து எவ்வித முடிவுகளுக்கும் வர இயலவில்லை.

சில பெண்கள் மார்பக சுய பரிசோதனை உத்தியை தொடர வேண்டும் அல்லது அதனை கற்று கொள்ள விரும்பலாம். இந்த பெண்கள் தகவல் அறிந்து முடிவு செய்வதற்கு ஏற்றவாறு ,இந்த இருபெரும் ஆராய்ச்சிகளி லிருந்தும் பற்றாக் குறையுடைய சான்றுகளே கிடைத்துள்ள விவரங்களை அவர்களோடு விவாதிக்க வேண்டும் என்பது எம் கருத்து. எனினும்,பெண்கள் மார்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி அறிந்து இருத்தல் வேண்டும். சில நாடுகளில் இருப்பது போன்று மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகமிருந்தால் மார்பக புற்றுநோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, பெண்கள், அவர்கள் மார்பகத்தில் எந்த மாற்றமாவது கண்டறிய நேரிட்டால் அது மார்பக புற்றுநோயாக இருக்கலாம் என்று எண்ணி மருத்துவ ஆலோசனை பெற ஊக்குவிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: இர.செந்தில் குமார், மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information