நாள்பட்ட சோர்வு நோய்க்குறி நோயாளிகளுக்கு சிகிச்சையாக உடற்பயிற்சி

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இந்த திறனாய்வில் யார் ஆர்வம் காட்டக் கூடும்?

•நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் (Chronic fatigue syndrome) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பணிபுரியும் சிறப்பு வல்லுநர்கள்

•உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்கள்.

•பொது மருத்துவர்கள்.

இந்த திறனாய்வு ஏன் முக்கியமானது?

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (Chronic fatigue syndrome CFS) சில நேரங்களில் மையால்ஜிக் என்செபலோமைலடிஸ் (ME) என்று அழைக்கப்படுகிறது. ஆய்வறிக்கையில் 1000 இல் 2 பேர் முதல் 100 இல் 2 பேர் வரை பெரியவர்கள் அமெரிக்காவில் CFS ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. CFS பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் நீடித்த சோர்வு, மூட்டு வலி, தலைவலி, தூக்கம் பிரச்சினைகள், மற்றும் கவனிக்கும் திறனில் குறைபாடு மற்றும் குறுகிய கால நினைவாற்றல் ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகள் CFS பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க இயலாமை மற்றும் துயரத்தை ஏற்படுத்தும். எதனால் இந்த நோய் வருகிறது என்பதற்கு மருத்துவ காரணம் அறியப்படவில்லை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குடும்பம், நண்பர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் மூலம் அவர்களின் நிலையை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. National Institute for Health and Care Excellence (NICE) CSF பாதிக்கபட்டவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சையை பரிந்துரைக்கிறது மற்றும் முந்தைய மறுஆய்வு ஆதாரங்கள் உடற்பயிற்சி சிகிச்சை ஒரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறை என்று கூறுகிறது. மக்கள் இந்த உடற்பயிற்சி சிகிச்சையை தங்களது அன்றாட வாழ்க்கையில் படிப்படியாக செய்ய பழகும் பொழுது உடல் செயல்பாடு மீண்டும் கிடைக்கபெற்று CFS அறிகுறிகள் குறைந்து அவர்கள் அன்றாட வாழ்வின் மேலாண்மைக்கு உதவ முடியும் என்று கருதப்படுகிறது.

இந்த திறனாய்வு CSF பாதிக்கப்பட்ட வயதுவந்தவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை ஒரு உறுதியான சிகிச்சை எனக் காட்டிய , இதற்கு முன்னதாக செய்யப்பட்ட கோக்ரேன் திறனாய்வு 2004 ஐ மதிப்பிடுகிறது, இந்த ஆய்வுக்கு பின் CFS ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சையின் பயன்கள் (விளைவுகள்) மற்றும் பாதுகாப்பை அறிய கூடுதல் ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன கேள்விகளுக்கு இந்த ஆய்வு பதிலளிக்க இலக்கு நிர்ணியக்கபட்டுள்ளது?

•உடற்பயிற்சி சிகிச்சை மற்ற "பங்கேற்பில்லா" சிகிச்சைகளை காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமா? (எ.கா. காத்திருத்தல்,வழக்கமான சிகிச்சை)? தளர்தல் நெகிழ்வுத்தன்மை, ,

•உடற்பயிற்சி சிகிச்சை வேறு 'செயலில்' சிகிச்சைகள் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமா? (எ கா. மருந்து,வேகத்தை கட்டுபடுத்துதல், புரிகை-நடத்தை மாற்றச் சிகிச்சை (CBT))?

•உடற்பயிற்சி சிகிச்சை மற்றொரு சிகிச்சையுடன் இணைந்து கொடுப்பது, தனித்து அளிப்பதை காட்டிலும் பயனுள்ளதாக இருக்குமா?

• மற்ற சிகிச்சைகள் விட உடற்பயிற்சி சிகிச்சை பாதுகாப்பானதா?

எந்தெந்த ஆய்வுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன?

மே 2014 வரை வெளியான CFS க்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்பட எல்லா உயர்-தரமான ஆய்வுகளை கண்டுபிடிக்க தரவுத்தளங்கள் தேடிநோம். கண்டுபிடிக்கபட்ட ஆய்வுகளிலிருந்து சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் சேர்க்கப்பட்டன,18 வயதுக்கு மேல் பெரியவர்கள் அடங்கும் CFS ஆய்வுகளில் 90% மேல் CSF தெளிவாக பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறிந்த ஆய்வுகள் திறனாய்வுக்கு உள்ளானது. மொத்தம் 1518 பங்கேற்பாளர்களைக் கொண்ட 8 ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். இதில் ஏழு ஆய்வுகள் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சி சிகிச்சை பயன்படுத்தி இருந்தார்கள், மீதமுள்ளவை ஏரோபிக் அல்லாத உடற்பயிற்சி ஆய்வுகளாகும். பெரும்பாலான ஆய்வுகள், வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை, ஒவ்வொரு முறையும் நிர்ணியக்கபட்ட கால இலக்காண 5 முதல் 15 நிமிடங்கள் வரை ,மற்றும் வேறுபட்ட வழிமுறைகளில் பயிற்சி அளவை அதிகரித்தல் போன்றவற்றுடன் வீட்டில் உடற்பயிற்சி செய்ய பங்கேற்பாளர்கள் . கேட்டுக்கொள்ளப்பட்டனர்

இந்த திறனாய்வில் உள்ள ஆதாரம் நமக்கு என்ன சொல்கிறது?

'பங்கேற்பில்லா"' சிகிச்சை அல்லது எந்த சிகிச்சை எடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது உடற்பயிற்சி சிகிச்சை சோர்வை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்குமென மிதமான ஆதாரங்கள் உள்ளன. உடற்பயிற்சி சிகிச்சை மக்களின் அன்றாட செயல்பாடு, தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலம் பற்றிய சுய மதிப்பீடுகள் போன்றவற்றில் ஒரு சாதகமான விளைவை தருகின்றன.

உடற்பயிற்சி சிகிச்சை வேகக்கட்டுப்பாட்டை காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறுகிறது ஒரு ஆய்வு. எனினும் உடற்பயிற்சி சிகிச்சை CBT விட திறனானது இல்லை

CFSவினால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை உடற்பயிற்சி சிகிச்சை மோசமாக்கவில்லை. கடுமையான பக்க விளைவுகள் சகல குழுக்களிலும் அரிதாக நேர்ந்தது, உடற்பயிற்சி சிகிச்சையின் பாதுகாப்பு பற்றி குறைந்த தகவல்களே உள்ளதால் இதில் உறுதியான முடிவுகள் எடுப்பதை கடினமாக்குகிறது

உடற்பயிற்சி வலியை குறைக்கிறது என்பதற்கு, பிற சுகாதார சேவைகள் பயன்பாட்டிற்கு, மற்றும் உடற்பயிற் சிசிகிச்சையிலிருந்து விலகுதல் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

அடுத்து என்ன நிகழ வேண்டும்?

ஆராய்ச்சியாளர்கள் , எந்த வகையான உடற்பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் உகந்த பயிற்சி காலஅளவு , பயிற்சியின் அளவு , பயிற்றுவிக்கும் முறை போன்றவை CFS,பாதிக்கப்பட்ட மக்ககளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார், மற்றும் சி.இ.பி.என்.அர் குழு