உடலியக்க நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான சிகிச்சை தலையீடுகள்

போதுமான உடலியக்க நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது இதயத்தமனி நோயை உள்ளடக்கிய பல எண்ணிக்கையிலான நாள்பட்ட நோய்களின் அதிகரித்த அபாயத்திற்கு வழி வகுக்கும். ஒழுங்கான உடலியக்க நடவடிக்கை, இந்த அபாயத்தை குறைக்கக் கூடும் மற்றும் பிற உடல், மற்றும் சாத்தியப்படும் மனநல நன்மைகளையும் வழங்கும். பெரும்பான்மையான வயது வந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் உடலியக்க சுறுசுறுப்பின்றி உள்ளனர். தொழில்முறை ஆலோசனை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுடனான வழி நடத்துதல் ஆகியவை மக்களை குறுகிய முதல் மத்திய-காலக் கட்டத்தில், அதிக உடலியக்க சுறுசுறுப்புடன் இருக்க ஊக்கப்படுத்தும் என்று இந்த திறனாய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நீண்ட-காலக் கட்டத்தில், குறிப்பிட்ட மக்கள் குழுக்களை அதிக உடலியக்க சுறுசுறுப்புடன் இருப்பதற்கு ஊக்கப்படுத்த உடற்பயிற்சி மேம்பாட்டின் எந்த முறைகள் சிறப்பாக வேலை செய்யும் என்பதை நிலைநாட்டுவதற்கு அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information