முதியவர்களுக்கான புனர்வாழ்வு சேவைகள் அமைவிடம்

பல காரணங்களுக்காக, முதியவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வு சேவைகளை வழங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அநேக முதியோர்கள் இருப்பது மாத்திரம் அல்ல, ஒரு பக்கவாதம், இடுப்பு எலும்பு முறிவு, அல்லது பொதுவாக ஒரு நோய்க்குப் பிறகான 'புனர்வாழ்வுத் திட்டத்தின்' முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதோடு கூட, சுகாதார பாதுகாப்பு வளங்களை திறமையாக பயன்படுத்துதல், தீவிரமான மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் மக்களுக்கு, மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதையும், மறுவாழ்வு வசதிகள் மற்றும் சமூக சேவைகள் சரியான இடத்தில் உள்ளனவா என்பதையும், உறுதி செய்வதற்கான நிர்ப்பந்தம் உள்ளது.

முதியவர்கள், புனர்வாழ்வு சேவைகளை பெற முடியும் என்பதை உறுதி செய்ய, புனர்வாழ்வு வழங்குதல் பல்வேறு வழிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வு எங்கு நடைப்பெறுகிறது என்பது இந்த சேவைகளில் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசமாகும். சில சேவைகள் நலம் பேணகங்கள் குடியிருப்பு காப்பில்லங்கள், மருத்துவ வசதி கொண்ட வளாகங்கள் போன்ற காப்பக சூழலில் நடைப்பெறும். இப்படியிருக்க, மற்ற சேவைகள், மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ நடைபெறும்.

வெவ்வேறு இடங்களில் நடைப்பெறும் முதியோர்கள் மீதான புனர்வாழ்வு சேவைகளின் விளைவுகளை ஒப்பிட ஒரு திறனாய்வு நடத்தப்பட்டது. சாத்தியமான அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, எந்த ஆய்வுகளும் கிடைக்கவில்லை. ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information